Published : 13 Feb 2018 10:09 AM
Last Updated : 13 Feb 2018 10:09 AM

`கலர்ஸ் தமிழ் என்ற பெயரில் பிப்.19-ம் தேதி புதிய டிவி சேனல் தொடக்கம்

பல்வேறு சுவையான நிகழ்ச்சிகளுடன் `கலர்ஸ் தமிழ்' என்ற பெயரில் புதிய டிவி சேனல் வரும் 19-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

வயாகாம் 18 மீடியா நிறுவனம் சார்பில் `கலர்ஸ் தமிழ்' என்ற பெயரில் பொழுதுபோக்கு சேனல் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதன் விளம்பரத் தூதராக நடிகர் ஆர்யா செயல்படுகிறார்.

இதற்கான அறிவிப்பை வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. `வயாகாம் 18' குழும தலைமை செயல் அதிகாரி சுதான்ஷு வாட்ஸ், பிராந்திய தலைவர் ரவீஷ் குமார், கலர்ஸ் தமிழ் சேனலின் பிசினஸ் ஹெட் அனுப் சந்திரசேகரன் ஆகியோர் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டனர்.

`வயாகாம் 18' நிறுவன பிராந்திய தலைவர் ரவீஷ் குமார் கூறும்போது,``நாட்டிலேயே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அதிகம் பார்க்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

`இது நம்ம ஊரு கலரு' என்ற பெயரில் கலர்ஸ் தமிழ் சேனலின் ஒளிபரப்பு வரும் 19-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இதில் ரசிகர்களைக் கவரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்க உள்ளோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x