Published : 13 Feb 2018 09:51 AM
Last Updated : 13 Feb 2018 09:51 AM

கோடை விடுமுறையில் பொழுதுபோக்கு, சுற்றுலா தலங்களுக்கு 400 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம்: அரசு போக்குவரத்துக் கழகங்கள் ஏற்பாடு

இந்த ஆண்டில், கோடை விடு முறையை முன்னிட்டு சென்னை யில் இருந்து 400 சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழகங்கள் முடிவு செய்துள்ளன.

தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரித் தேர்வுகள் ஏப்ரல் 3-வது வாரத்தில் முடிவடையும். இதையடுத்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப் படும். இந்த விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்கும், பொழுதுபோக்கு இடங்களுக்கும், சுற்றுலா இடங்களுக்கும் மக்கள் ஆர்வமாகச் செல்வார்கள்.

குறிப்பாக, கடற்கரைப் பகுதிகள், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். எனவே, மக்களின் தேவைக்கு ஏற்றவாறு, சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழகங்கள் முடிவு செய்துள்ளன.

சிறப்பு ஏற்பாடுகள்

இந்த ஆண்டில் மேற்கொள்ள உள்ள சிறப்பு ஏற்பாடுகள் குறித்து அரசு போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக கோடை காலத்தில் சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்புப் பேருந்து கள் இயக்கப்படும்.

இந்த ஆண்டில் எவ்வளவு பேருந்துகளை இயக்குவது, எந்தெந்த சுற்றுலா மையங்கள் மற்றும் மாவட்ட பகுதிகளுக்கு கூடுதலாக இயக்குவது என்பது தொடர்பாக விரைவில் போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் கூட்டம் நடக்கவுள்ளது.

உரிய நடவடிக்கை

அரசு பஸ் கட்டண உயர்வு போன்ற விவகாரம் மக்களிடம் இருந்தாலும், பயணிகளுக்கு சிறப்பான சேவையை வழங்கி பயணிகளை மீண்டும் தக்கவைத்துக்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக கோடை விடுமுறை நாட்களில் வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாகச் செல்லும் என எதிர்பார்க்கிறோம்.

எனவே, 300 முதல் 400 சிறப்பு பேருந்துகளை இயக்குவோம். நீண்ட தூரத்துக்கு பயணம் செய்யும் பயணிகள் போக்குவரத்துத் துறை இணையதளத்தில் (www.tnstc.in) முன்பதிவு செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றனர்.

2,000 புதிய பேருந்துகள்

இதுதொடர்பாக போக்கு வரத்து கழக அதிகாரிகள் தெரிவித்ததாவது: ``தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் சிறப்பான பேருந்து வசதி அளிப் பதற்கான பணி நிர்வாகம் தரப்பில் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, பொங்கல் பண்டிகைக்குப் பிறகு, கோடை விடுமுறையில்தான் மக்கள் கூட்டம் அதிகமாக வரும்.

எனவே, புதிய பேருந்துகளை வாங்குவதற்கான பணி தீவிரமடைந்துள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் மாதம் இறுதிக்குள் 2,000 புதிய பேருந்துகளை வாங்கவுள்ளது.

அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் படுக்கை வசதி (சிலீப்பர் கிளாஸ்) கொண்ட பேருந்துகள், அதிநவீன சொகுசு பேருந்துகளும் இடம் பெறுகின்றன. மக்களுக்கு தரமான சேவை கிடைக்கும் பட்சத்தில், அரசு பஸ்களில் மீண்டும் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x