Published : 13 Feb 2018 09:13 AM
Last Updated : 13 Feb 2018 09:13 AM

அம்மா ஸ்கூட்டருக்கு 3.36 லட்சம் பேர் விண்ணப்பம்

அம்மா இருசக்கர வாகன திட்டம் தொடர்பாக மகளிர் மேம்பாட்டு ஆணைய மேலாண் இயக்குநர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பெண்கள் தங்கள் பணியிடங்களுக்கு செல்வதில் உள்ள சிரமங்களை உணர்ந்து, நாட்டிலேயே முதல்முறையாக ‘இருசக்கர வாகனங்கள் வாங்க 50 சதவீதம் மானியம்’ வழங்கும் திட்டத்தை தேர்தல் வாக்குறுதியாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அளித்திருந்தார். தமிழக முதல்வராக கே.பழனிசாமி பதவியேற்றதும் முதல் கோப்பாக, மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்துக்கு கையொப்பமிட்டார்.

அதன்பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதன்படி, சென்னையில் 35,028, கோவை 22,912, சேலம் 19,847, காஞ்சிபுரம் 16,714, வேலூர் 14,616, ஈரோடு 14,493, திருப்பூர் 13,886, மதுரை 13,375, நெல்லை 12,359, கன்னியாகுமரி 12,259 உட்பட தமிழகம் முழுவதும் மொத்தம் 3 லட்சத்து 36 ஆயிரத்து 103 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x