Published : 13 Feb 2018 09:07 AM
Last Updated : 13 Feb 2018 09:07 AM

போக்குவரத்து தொழிலாளர் விவகாரம்: முதல்வர் பழனிசாமியை இன்று சந்திக்கிறார் ஸ்டாலின்

முதல்வர் கே.பழனிசாமியை திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை 12 மணிக்கு தலைமைச் செயலகத்தில் சந்திக்கிறார்.

ஊதிய உயர்வு, ஓய்வுக்கால பலன்களை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜனவரி 5 முதல் 11-ம் தேதி வரை போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களை சீரமைப்பது தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் மு.க.ஸ்டாலின் குழு ஒன்றை அமைத்தார். போக்குவரத்துத் துறை முன்னாள் அமைச்சர்கள் க.பொன்முடி, கே.என்.நேரு, தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம், டி.செங்குட்டுவன் எம்எல்ஏ ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். இக்குழு தனது அறிக்கையை நேற்று முன்தினம் ஸ்டாலினிடம் வழங்கியது.

இந்நிலையில் இந்தக் குழுவின் அறிக்கையை வழங்குவதற்காக முதல்வர் பழனிசாமியை இன்று பகல் 12 மணிக்கு தலைமைச் செயலகத்தில் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். பரபரப்பான அரசியல் சூழலில் இந்தச் சந்திப்பு நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x