Published : 11 Feb 2018 09:04 PM
Last Updated : 11 Feb 2018 09:04 PM

ரஜினியும், கமலும் அரசியலில் எனக்கு ஜூனியர்கள்தான்; அவர்களால் அரசியலில் ஜெயிக்க முடியாது: விஜயகாந்த்

சினிமாவில்தான் ரஜினி, கமல் எனக்கு சீனியர்கள். அரசியலில் எனக்கு அவர்கள் ஜூனியர்கள்தான். அவர்களால் அரசியலில் ஜெயிக்க முடியாது என்று தேமுதிக தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சென்னை அம்பத்தூரில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் வேண்டும். ஆனால், அத்தேர்வில் உள்ள முறைகேடுகளை களைய வேண்டும். பாஜகவால் தமிழகத்தில் காலூன்றவோ, கையை ஊன்றவோ முடியாது. சினிமாவில் தான் ரஜினி, கமல் எனக்கு சீனியர்கள். அரசியலில் எனக்கு அவர்கள் ஜூனியர்கள்தான். அவர்களால் அரசியலில் ஜெயிக்க முடியாது'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x