Published : 11 Feb 2018 07:14 AM
Last Updated : 11 Feb 2018 07:14 AM

ரவுடி பினு மும்பையில் பதுங்கல்? போலீஸார் தீவிர விசாரணை

ரவுடி பினு மும்பைக்கு தப்பிச் சென்றதாக கிடைத்த தகவலை அடுத்து அவரை பிடிப்பது குறித்து காவல் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

சென்னை பூந்தமல்லி அருகே மலையம்பாக்கத்தில் கடந்த 6-ம் தேதி இரவு ரவுடி பினுவின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட 76 ரவுடிகளை போலீ ஸார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். இதில் ரவுடி பினு, அவரது முக்கிய கூட்டாளிகள் கனகராஜ், விக்னேஷ், தீனதயாளன், காமேஸ்வரன், மதன், அலாவுதீன், டென்னிஸ் உட்பட 50-க்கும் அதிகமானவர்கள் தப்பிச்சென்று விட்டனர்.

தப்பிச்சென்ற ரவுடிகளை பிடிக்க போலீஸார் தமிழகம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட ரவுடிகளின் புகைப்படங்கள் தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு அனுப்பியுள்ளனர். அந்த புகைப்படங்களை வைத்து அந்தந்த பகுதிகளில் போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதில், பட்டுக்கோட்டையில் வைத்து பினுவின் கூட்டாளிக ளில் ஒருவரான முகேஷ் என்பவரை நேற்று முன்தினம் போலீ ஸார் கைது செய்தனர். பினு பிறந்தநாள் கேக் வெட்டும்போது, அவரது அருகில் முகேஷ் இருக்கிறார்.

ரவுடி பினு திருவள்ளூரில் பதுங்கி இருக்கலாம் என்ற தகவலையடுத்து நேற்று திருவள்ளூரில் முக்கிய இடங்களில் வாகன சோதனையில் போலீ ஸார் ஈடுபட்டனர். ரவுடி பினுவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், திண்டிவனம் உட்பட பல பகுதிகளில் தனிப்படையினர் சோதனை நடத்தியும் ரவுடி பினு குறித்த தகவல் கிடைக்கவில்லை.

பினுவின் சொந்த ஊர் கேரளா என்பதால், அங்கே பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு ஏற்பட்டது. ஆனால் பினு மும்பைக்கு தப்பிச்சென்று அங்கே வேறொரு ரவுடியின் அடைக்கலத்தில் இருப்ப தாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதால் தனிப்படை போலீ ஸார் மும்பை செல்ல உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x