Published : 11 Feb 2018 07:06 AM
Last Updated : 11 Feb 2018 07:06 AM

போலீஸார் துரத்தி சென்றபோது விபரீதம்: காசிமேட்டில் கடலில் விழுந்து மீனவர் பரிதாப உயிரிழப்பு- உறவினர்கள் சாலை மறியலால் பதற்றம்

காசிமேட்டில் போலீஸார் விரட் டிச் சென்றதில் கடலில் விழுந்து மீனவர் உயிரிழந்தார். இதற்கு காரணமான போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மீனவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால், காசிமேட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை, காசிமேடு சிஜி காலனியைச் சேர்ந்தவர் தமிழரசு (35). மீனவரான இவர் நண்பர் களுடன் சேர்ந்து விசைப்படகு வைத்து மீன் பிடித்து வந்தார்.

இவருடைய மனைவி திலக வதி (29). இவர்களுக்கு லக்சன், அனிஷ் ஆகிய மகன்கள் உள்ளனர்.

காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் படகுகள் நிறுத்தும் பகுதி உள்ளது. இரவு நேரங்களில், படகுகள் நிறுத்தும் வார்ப்பு பகுதி யில், காவலுக்கு ஆள் இருப்பர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தமிழரசு மற்றும் அவரது நண்பர்கள் 3 பேருடன், விசைப்படகில் அமர்ந்திருந்தனர். காவலுக்கு இருந்த காவலாளி, சாப்பிடச் சென்றுள்ளார்.

அவர் வரும் வரை தமிழரசன் மற்றும் அவரது நண்பர்கள் சீட்டாட்டம் ஆடியதாகக் கூறப்படுகிறது. அப்போது போலீஸ் எஸ்ஐ கண்ணன் தலைமையிலான போலீஸார், மீன் பிடி துறைமுகத்துக்கு வந்துள்ளனர்.

தீயணைப்பு துறை உதவி

தமிழரசு மற்றும் அவரது நண்பர்களைத் துரத்தியுள்ளனர். அதில், பயந்துப்போய் ஓடிய தமிழரசு படகிலிருந்து தவறி கடலுக் குள் விழுந்தார்.

இதை தொடர்ந்து, போலீஸார் மீதம் உள்ள அந்த 3 பேரைப் பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். தமிழரசுக்கு நீச்சல் தெரியும் என்பதால், அவர் வந்து விடுவார் என நண்பர்கள் நினைத்தனர். ஆனால், அவர் இரவு முழுவதும் வரவில்லை.

இதைத் தொடர்ந்து, போலீஸார் தீயணைப்புத் துறை உதவியுடன் தேடிப் பார்த்தனர். இதனால், காசிமேட்டில் பதட்டம் நிலவியது. அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டனர். நேற்று காலை மீன் வியாபாரம் செய்யும் இடத்தில் தமிழரசு உடல் கரை ஒதுங்கியது. மீனவர்கள், உறவினர்கள், பொதுமக்கள் அங்கு திரண்டனர். தகவல் கிடைத்து, வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் ஷெசாங் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸார் சடலத்தை எடுக்க முயன்றனர். ஆனால், நியாயம் கிடைக்கும் வரையில் உடலை ஒப்படைக்க மாட்டோம் என உறவினர்கள் தெரிவித்து 3 மணி நேரம் போராட்டம் நடத்தினர். போலீஸாரின் சமரச பேச்சைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x