Published : 05 Feb 2018 08:10 AM
Last Updated : 05 Feb 2018 08:10 AM

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறும்போது, “தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மூடுபனி நிலவும். ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெப்பநிலை அளவின்படி, குறைந்தபட்சமாக உதகையில் 6, குன்னூரில் 8.9, வால்பாறையில் 9.5, கொடைக்கானலில் 9.6, திருப்பத்தூரில் 14.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x