Published : 05 Feb 2018 07:59 AM
Last Updated : 05 Feb 2018 07:59 AM

நீரின்றி கருகும் சம்பா நெல்லை காக்க நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்கச் செய்வோம்: தமிழக எம்.பி.க்களுக்கு அன்புமணி அழைப்பு

கருகும் சம்பா நெற்பயிர்களைக் காக்க நடப்பு கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்கச் செய்ய திரளுமாறு தமிழக எம்பிக்களுக்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி அழைப்பு விடுத்துள்ளார்.

தருமபுரியில் நேற்று நிருபர் களிடம் அவர் கூறியதாவது: தமிழக டெல்டா பகுதிகளில் சுமார் 9.5 லட்சம் ஏக்கர் பரப் பளவில் நடவு செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிர் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது விவசாயி களுக்கு கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சூழல் விவசாயிகளை தற்கொலைக்கு உள்ளாக்குகிறது.

தற்போது மேட்டூர் அணையில் 43 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. இது மிகக் குறைந்த அளவு நீர் இருப்பு ஆகும். குடிநீருக்காக மட்டும் விநாடிக்கு 500 கன அடி வீதம் தற்போது தண்ணீர் திறக்கப்படுகிறது. அதேநேரம், கர்நாடகா மாநிலத்தில் உள்ள 5 அணைகளில் தற்போது 37 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது. தமிழகத்துக்கு இதுவரை வழங்கப்பட வேண்டிய 80 டிஎம்சி அளவு தண்ணீர் நிலுவை யில் உள்ளது. அதில் தற்போதைக்கு 10 டிஎம்சி அளவு தண்ணீரையாவது பெற்றால்தான் சம்பா நெற்பயிர்களை காக்க முடியும். தண்ணீர் வழங்க வேண்டுமென தமிழக விவசாயிகள் வைக்கும் கோரிக்கையை கர்நாடகா அரசு கண்டுகொள்ளவே இல்லை.

இந்த சூழலில், தண்ணீர் பெறுவதற்காக தமிழக அரசு உடனடி யாக உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும். அதேபோல, அனைத்துக் கட்சித் தலைவர்களையும் டெல்லிக்கு அழைத்துச் சென்று மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். மேலும், நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 2 அவைகளும் ஸ்தம்பிக்கும் வகையில் தமிழக எம்பிக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கோரிக்கையை வலியுறுத்தி செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x