Published : 05 Feb 2018 07:20 AM
Last Updated : 05 Feb 2018 07:20 AM

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்துக்கு கோயில் நிர்வாகத்தின் அலட்சியமே காரணம்: அரசுக்கு அறிக்கை அனுப்பினார் மாவட்ட ஆட்சியர்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்துக்கு கோயில் நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என அரசுக்கு மாவட்ட ஆட்சியர் அறிக்கை அனுப்பி உள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த வெள்ளிக் கிழமை இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள வீர வசந்தராயர் மண்டப வளாகத் தில் அமைந்திருந்த 36 கடைகள் சேதமடைந்தன.

தீ விபத்துக்கான காரணங்களை ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு ஏற்பட்டுள்ள சேதம் மற்றும் கோயில் கட்டிடத்தின் உறுதித் தன்மையை மதிப்பிட தனிக்குழு அமைக்கப் பட்டுள்ளது. தீ விபத்து நடந்த பகுதியை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இது தொடர்பாக அரசுக்கு அவர் இடைக்கால அறிக் கை ஒன்றை அனுப்பினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கோயிலில் மிகக் குறுகிய இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளுக்கு கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த கடைகளில் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டு வரும் உபகரணங்கள் இல்லை. பக்தர்களிடம் கெடுபிடி காட்டும் கோயில் நிர்வாகம் பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியமாக இருந்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

ஏற்கெனவே தீ விபத்துக்கு கோயில் நிர்வாகத்தின் மெத்தனப் போக்குதான் காரணம் என பல்வேறு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியரின் அறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x