Published : 01 Feb 2018 10:18 AM
Last Updated : 01 Feb 2018 10:18 AM

திருநங்கைகளின் நடமாடும் உணவகம்

கோவையில் நடமாடும் உணவகத்தை திருநங்கைகள் தொடங்கியுள்ளனர்.

கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் யுகம் மாணவர் குழு, கோவை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் ஆகியவை ‘ட்ரான்ஸ் பிரைடு - ஃபுட் ட்ரக்’ என்ற பெயரில் நடமாடும் உணவு வாகனத்தை உருவாக்கியுள்ளன. இந்த வாகனத்தின் செயல்பாட்டை ரோட்டரி சங்கத் தலைவர் என்.தாமோதரன், குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி துணைத் தாளாளர் சங்கர் வாணவராயர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதில், 15 ஆண்டுகளாக சமையல் கலையில் சிறந்து விளங்கும் தஸ்லிமா நஸ்ரின், சுசித்ரா, யாமினி ஆகிய திருநங்கைகள் இடம்பெற்றுள்ளனர். ஃபிரான்கீஸ், சான்ட்விச்கள், பர்கர், பிரியாணி வகைகள், ஜுஸ் வகைகள் போன்றவை தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வாகனம் 15 நாட்களுக்கு கோவை மற்றும் சுற்றியுள்ள கல்லூரிகளுக்குச் சென்று, உணவுப் பொருட்களை விற்பனை செயயும். யுகம் மாணவர் குழுவினரும் சென்று, தேவையான ஏற்பாடுகளை செய்வர். ரோட்டரி நிர்வாகிகள் சீதாராமன், கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் செந்தில் ஜெயவேல் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x