Published : 01 Feb 2018 08:44 AM
Last Updated : 01 Feb 2018 08:44 AM

குறு, சிறு, நடுத்தர தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க சென்னையில் விற்பனையாளர் தொழில் கண்காட்சி

குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க சென்னையில் விற்பனையாளர் தொழில் கண்காட்சி வரும் பிப்.2, 3-ம் தேதிகளில் நடக்கிறது.

இதுகுறித்து மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு நிறுவனத்தின் கூடுதல் ஆலோசகர் எஸ்.சிவஞானம் கூறியதாவது:

இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிலையம் வரும் பிப்ரவரி 2, 3-ம் தேதிகளில் தொழில் கண்காட்சிக்கும், பயிலரங்கத்துக்கும் ஏற்பாடு செய்துள்ளது. இந்த கண்காட்சி சென்னை கிண்டியில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் வளாகத்தில் நடை பெறும்.

150 அரங்குகள்

2 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் இயந்திரவியல், வேதியியல், மின்சாரம், மின்னணுவியல், கணினி, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த குறு, சிறு நிறுவனங்கள், குறிப்பாக அரசு, பொதுத்துறை மற்றும் சேவைகளை வழங்கும் விற்பனையாளர்களாக விரும் பும் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.

இந்த கண்காட்சியில் 150 அரங்குகள் அமைக்கப்படும். சுமார், 2,500 பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படு கிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் இக்கண்காட்சி மூலம் பயனடைவார் கள்.

கலந்துரையாடல்

விற்பனையாளர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ளும் முறை பற்றிய தொழில்நுட்பப் பயிலரங்குகளுக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உயரதி காரிகளுடன் கலந்துரையாடல் களுக்கும் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x