Published : 06 Jan 2018 01:39 PM
Last Updated : 06 Jan 2018 01:39 PM

அரசின் தவறான அணுகுமுறையினால் போராட்டம் நீடிக்கிறது: முத்தரசன் கண்டனம்

தொழிற்சங்க தலைவர்கள் பிரச்சனைக்கு சுமுகத் தீர்வு காண அனைத்துமுயற்சிகளும் மேற்கொள்ளும் நிலையில் அரசு அதை பயன்படுத்தாமல் தவறான அணுகுமுறையை கையாள்வதால் போராட்டம் நீடிக்கிறது என்று முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை:

“அரசின் தவறான அணுகுமுறை காரணமாக, அரசுபோக்குவரத்து தொழிலாளர்கள்மூன்றாம் நாளாக தங்களது வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்துமேற்கொண்டுள்ளனர்.

கடந்த மூன்று தினங்களாக மாநிலம் முழுவதும் போக்குவரத்து முற்றிலும்பாதிக்கப்பட்டு பொதுமக்கள், மாணவர்கள், பணியாளர்கள் என அனைவரும் மிகக்கடுமையான முறையில் பாதிக்கப்பட்டுள்ளனர். தனியார் பேருந்துகளில் பயணிகளிடம்அதிக அளவில் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

இந்நிலையில் தொழிற்சங்க தலைவர்களை அழைத்து பேசி சுமுகத் தீர்வுகாண்பதற்கு மாறாக போராடும் தொழிலாளர்கள் மீது அடக்கு முறைகளைமேற்கொள்வதும், கருங்காலிகளை பயன்படுத்தி பேருந்துகளை இயக்க செய்வதும், லைசன்ஸ் உள்ளவர்கள் எல்லாம் வேலைக்கு வரலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மூலம் அழைப்பு விடுக்கப்படுகிறது.

மாவட்ட ஆட்சித் தலைவர்களை பேருந்துநிலையங்களுக்கு அனுப்பி வைத்து, மாவட்டத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை. என்றும்பேருந்துகள் அனைத்தும் இயங்கிக் கொண்டுள்ளது என்று உண்மைக்கு மாறாக பேட்டிஅளிக்க செய்வதும் எவ்வித பயனையும் ஏற்படுத்தாது. மாறாக எதிர்விளைவுகளையேஉருவாக்கும் என்பதனை அரசு உணரவேண்டும்.

தொழிற்சங்கத் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்தால், தாங்கள்வருவதற்கு தயார் என்றும், பேச்சுவார்த்தைக்கு அழைக்கக் கோரியும் அரசுக்குவேண்டுகோள் விடுத்து வருகின்றனர். தொழிற்சங்க தலைவர்கள் பிரச்சனைக்கு சுமுகத் தீர்வு காண அனைத்துமுயற்சிகளும் மேற்கொள்ளும் நிலையில் அரசு அதனை பயன்படுத்தி தீர்வு காண்பதற்குமாறாக அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வது கடும் கண்டனத்திற்குரியது.

முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு தீர்வுகாண முன்வரவேண்டுமென மீண்டும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x