Published : 06 Jan 2018 09:55 AM
Last Updated : 06 Jan 2018 09:55 AM

இன்றும் நாளையும் பராமரிப்பு பணி:கும்மிடிப்பூண்டி தடத்தில் ரயில் சேவையில் மாற்றம்; தெற்கு ரயில்வே அறிவிப்பு

அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே ஜன. 6, 7-ம் தேதிகளில் பராமரிப்பு பணி நடக்கவுள்ளதால் கும்மிடிப்பூண்டி தடத்தில் ரயில்சேவையில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 6-ம் தேதி மூர்மார்க்கெட் – கும்மிடிப்பூண்டிக்கு நள்ளிரவு 12.15, அதிகாலை 4.20 மணிக்கு செல்லும் மின்சார ரயில்கள் எண்ணூர் வரை மட்டுமே இயக்கப்படும். கும்மிடிப்பூண்டி – மூர்மார்க்கெட்டுக்கு அதிகாலை 2.45, 4 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் எண்ணூரில் இருந்து இயக்கப்படும். இதேபோல் , தன்பாத் – ஆலப்புழா விரைவு ரயில் (13351), பாட்னா – எர்ணாகுளம் விரைவு ரயில் (22644) கூடூர், ரேணிகுண்டா, அரக்கோணம் வழியாக மாற்றப்பாதை யில் இயக்கப்படுவதால், நாயுடுபேட்டை, சூளூர்பேட்டை ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்லும்.

இதேபோல் வரும் 7-ம் தேதி, மூர்மார்க்கெட் – கும்மிடிப்பூண்டிக்கு நள்ளிரவு 12.15, அதிகாலை 4.20 மணி மின்சார ரயில்கள் எண்ணூர் வரை மட்டுமே இயக்கப் படும். கும்மிடிப்பூண்டி – மூர்மார்க்கெட் அதிகாலை 2.45, 4 மணி மின்சார ரயில்கள் எண்ணூரில் இருந்து இயக்கப்படும். மூர்மார்க்கெட் – கும்மிடிப்பூண்டிக்கு காலை 9.30, 10.25, 11.35, மதியம் 12.20, 1.25 மணி மின்சார ரயில்கள் பொன்னேரி வரையில் இயக்கப்படும். சூளூர்பேட்டைக்கு காலை 9.55, மதியம் 12.40, சென்னை கடற்கரை – கும்மிடிப்பூண்டிக்கு காலை 9.40-க்கு செல்லும் மின்சார ரயில்கள் பொன்னேரி – கும்மிடிப்பூண்டி இடையே ஒரு பகுதி ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல், சூளூர்பேட்டையில் இருந்து காலை 10, மதியம் 1.15, கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 10.50, 11.20, மதியம் 12.55, 1.35, 2.40, 3.15 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் கும்மிடிப்பூண்டி – பொன்னேரி இடையே ஒரு பகுதி ரத்து செய்யப்படு கிறது.

கவுஹாத்தி – திருவனந்தபுரம் விரைவு ரயில், ஹைதராபாத் – சென்னை விரைவு ரயில், டேராடூன் – மதுரை விரைவு ரயில், தன்பாத் – ஆலப்புழா விரைவு ரயில், பாட்னா – எர்ணாகுளம் விரைவு ரயில் ஆகியவை மாற்றுப்பாதையில் இயக்குவதால் நாயுடுபேட்டை, சூளூர்பேட்டை ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x