Published : 10 Dec 2017 04:26 PM
Last Updated : 10 Dec 2017 04:26 PM

மாதம் ரூ.18 ஆயிரம் ஊதியம் வழங்கக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதம்

மாதம் ரூ.18 ஆயிரம் ஊதியம் வழங்கக்கோரி சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் மதுரை காளவாசலில் உண்ணாவிரதம் இருந்தனர்.

இப்போராட்டத்துக்கு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளன துணைப் பொதுச்செயலாளர் சி.வேல்முருகன் தலைமை வகித்தார். மதுரை மாவட்ட செயலாளர் வி.செந்தில்குமார் முன்னிலை வகித்தார். நகர் சிஐடியு செயலாளர் ஆர்.தெய்வராஜ் உண்ணாவிரதத்தை தொடங்கிவைத்தார். நிர்வாகிகள் வாசுதேவன், நன்மாறன், லெனின் உட்பட பலர் வாழ்த்திப் பேசினர். மாநில பொதுச் செயலாளர் கே.திருச்செல்வன் நிறைவுரை ஆற்றினார். மாவட்ட தலைவர் சிவக்குமார் உட்பட திரளான பணியாளர்கள் பங்கேற்றனர்.

மாவட்ட செயலாளர் செந்தில்குமார் கூறியதாவது: 15 ஆண்டுகளாக பணிபுரிந்தும் தொகுப்பூதியம்தான் வழங்கப்படுகிறது. விடுமுறை உள்ளிட்ட எந்த அடிப்படை உரிமையும் சட்டப்படி வழங்கப்படவில்லை. பணிமூப்பு பட்டியல் கூட முறையாக வெளியிடப்படவில்லை. டாஸ்மாக் அலுவலகத்தில் வைத்தே ஊழியர்களிடம் லஞ்சம் பெற்று அதிகாரிகளுக்கு வழங்கும் புரோக்கர்கள் அதிகரித்துவிட்டனர். திருட்டு, கொள்ளை சம்பவங்கள் நடந்தால் ஊழியர்தான் பொறுப்பு என நிர்பந்தம் செய்கின்றனர். 15 ஆண்டுகளாக பணியாற்றியுள்ள நிலையில் சலுகை வழங்காததால் விரக்தியடைந்துள்ளோம். மாதம் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். பணியின்போது இறந்தால் வாரிசுக்கு வேலை வழக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x