Published : 10 Dec 2017 09:26 AM
Last Updated : 10 Dec 2017 09:26 AM

297 படகு, 3,117 மீனவர் மாயம்: அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

ஒக்கி புயலில் சிக்கி, தென் மாவட்டங்களைச் சேர்ந்த 297 படகுகளும், 3,117 மீனவர்களும் காணாமல் போனதாக அறியப்படுகிறது என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக வேட்பாளர் இ.மதுசூதனனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புயலால் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 297 படகுகளும், 3,117 மீனவர்களும் காணாமல் போனதாக அறியப்படுகிறது. பல்வேறு மாநில துறைமுகங்களில் கரை ஒதுங்கிய 245 படகுகள், 2015 மீனவர்களின் அடையாளம் காணப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் உத்தரவுபடி, ஐஏஎஸ் அலுவலர்கள் தலைமையிலான குழுக்கள் அந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு, மீனவர்களை பத்திரமாக அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அலுவலர்கள், உள்ளூர் மீனவர்கள் அளித்த தகவலின்படி காணாமல்போன படகுகள், மீனவர்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 52 படகுகளும், அதில் இருந்த மீனவர்களும் ஆங்காங்கே கரை ஒதுங்கி இருக்க வாய்ப்பு உள்ளது. அந்த நம்பிக்கை இருக்கிறது. தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. முதல்வர் அறிவுறுத்தல்படி, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சந்திக்கிறார். கடைசி மீனவர் கிடைக்கும் வரை தேடுதல் பணி தீவிரமாக நடைபெறும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x