Published : 24 Nov 2017 10:15 AM
Last Updated : 24 Nov 2017 10:15 AM

அதிமுக தொடங்கியபோது எம்ஜிஆருடன் இருந்தவர்: முன்னாள் எம்எல்ஏ காலமானார்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் குழ.செல்லையா, உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.

எம்ஜிஆர் அதிமுக-வை தொடங்கியபோது, அதன் தொடக்க கால தலைவர்களில் ஒருவரும், ‘சொல்லரசு’ என அப்பகுதி மக்களால் அழைக்கப்பட்டவருமான குழ.செல்லையா(83), உடல்நலக்குறைவு காரணமாக பேராவூரணி தனியார் மருத்துவமனையில் நேற்று காலமானார்.

தொடக்கத்தில் திமுகவில் இருந்த குழ.செல்லையா, கட்சியில் வாய்ப்பு கிடைக்காததால், 1971 சட்டப்பேரவை தேர்தலில் பேராவூரணி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ-வாக இருந்தார்.

பின்னர், எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியபோது, அதன் விண்ணப்பப் படிவத்தில் எம்ஜிஆர் முதலாவதாகவும், குழ.செல்லையா 5-வது நபராகவும் கையெழுத்திட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் அதிமுக மாநில விவசாய பிரிவு செயலாளராகவும் இருந்துள்ளார். இடையில் தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தை தொடங்கி அதன் தலைவராகவும் யல்பட்டார் . குழ.செல்லையாவின் இறுதி சடங்கு இன்று (நவ. 24) அவரது சொந்த ஊரான முதுகாடு கிராமத்தில் மாலை 3 மணியளவில் நடைபெறவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x