Published : 13 Oct 2017 09:09 PM
Last Updated : 13 Oct 2017 09:09 PM

டெங்கு பாதிப்பு குறித்த சரியான தகவல்களை மத்திய குழுவிடம் அளிக்க வேண்டும்: தமிழிசை

டெங்கு பாதிப்புகள் குறித்த சரியான தகவல்களை மத்திய குழுவிடம் தமிழக அரசு அளிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''தமிழகம் முழுவதம் டெங்கு பாதிப்புகள் அதிகமாகி இருப்பது கவலை அளிக்கிறது. இந்த விஷயத்தில் தமிழக அரசுக்கு உதவி செய்வதற்காக மத்திய குழு சென்னை வந்துள்ளது.

டெங்குவால் ஏற்பட்ட பாதிப்புகள், உயிரிழப்புகள் குறித்த சரியான தகவல்களை மத்திய குழுவிடம் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும். சரியான தகவல்களை அளித்தால் தான் மத்திய அரசிடம் இருந்து உரிய நிதியை பெற முடியும்.

டெங்கு எப்படி பரவுகிறது, வந்த பிறகு என்ன செய்வது என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும். டெங்கு குறித்து அமைச்சர்கள், அரசியல்வாதிகள் சொல்வதை விட மருத்துவர்கள் சொல்வதைதான் மக்கள் கேட்டு செயல்பட வேண்டும்.

டெங்கு விவகாரத்தை ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் அரசியல் ஆக்காமல் டெங்குவை விரட்ட அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.

தமிழக பாஜக சார்பில் நடமாடும் மருத்துவமனை இயங்கு வருகிறது. தமிழக முழுவதும் பாஜக சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது'' என்று தமிழிசை கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x