Published : 13 Oct 2017 09:05 AM
Last Updated : 13 Oct 2017 09:05 AM

நேரு பூங்கா – எழும்பூர் - சென்ட்ரலுக்கு சிறிய பேருந்து சேவை தொடக்கம்

மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் நேரு பூங்காவில் இருந்து எழும்பூர் வழியாக சென்ட்ரலுக்கு சிறிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘சென்னையில் இயக்கப்படும் சிறிய பேருந்துகளுக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. அடுத்தகட்டமாக 100 சிறிய பேருந்துகள் இயக்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான வழித்தடங்கள் தேர்வு செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

20 நிமிடங்களுக்கு...

இன்னும், ஓரிரு மாதங்களில் இந்த சிறிய பேருந்துகள் இயக்கப்படும். இதற்கிடையே, தற்போது நேரு பூங்காவில் இருந்து எழும்பூர் வழியாக சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு புதிய சிறிய பேருந்து சேவை (எஸ்.96) தொடங்கப்பட்டுள்ளது.

இந்த சேவையில் 20 நிமிடங்களுக்கு ஒரு சிறிய பேருந்து இயக்கப்படும்’’ என்று போக்குவரத்து கழக அதிகாரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x