Published : 13 Oct 2017 09:00 AM
Last Updated : 13 Oct 2017 09:00 AM

மக்களின் தேவைக்கு ஏற்றவாறு அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இலவச சைக்கிள் திட்டம் விரிவாக்கம்

மக்களின் தேவைக்கு ஏற்றவாறு அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இலவச சைக்கிள் சேவை திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் விமான நிலையம் – நேரு பூங்கா, பரங்கிமலை – நேரு பூங்கா, சின்னமலை – ஆலந்தூர் - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில்கள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன.

20 நிமிடங்கள் இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படு கிறது. வழக்கமாக அலுவலக நாட்களில் காலை 6 மணிக்கும், ஞாயிறுகளில் காலை 8 மணிக்கும் மெட்ரோ ரயில்சேவை தொடங்கும். இதற்கிடையே, இலவச சைக்கிள் திட்டத்தை மெட்ரோ ரயில் சேவை தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது:

மக்களை கவரும் வகையிலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் இலவச சைக்கிள் திட்டம் மெட்ரோ ரயில் நிலையங்களில் தொடங்கியுள்ளது. ஈக்காட்டுத்தாங்கல், நேரு பூங்கா, திருமங்கலம், அண்ணாநகர் வட பழனி, ஷெனாய்நகர் மெட்ரோ ரயில் நிலையங்களில் இதைத் தொடங்கியுள்ளோம்.

அதன்படி, முதல் 100 மணி நேரம் இலவசமாக பயணம் செய்யலாம். சைக்கிள் முன்பதிவுக்காக rake-code bicycle ID என்று 9645511155 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு 9744011777 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மக்களின் தேவைக்கு எவ்வாறு அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இலவச சைக்கிள் சேவை விரிவுப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x