Published : 18 Sep 2017 06:57 PM
Last Updated : 18 Sep 2017 06:57 PM

18 எம்.எல்.ஏக்கள் தொகுதி காலி: தேர்தல் ஆணையத்துக்கு பேரவைச்செயலாளர் கடிதம்

18 எம்.எல்.ஏக்கள் தகுதியிழப்பு செய்யப்பட்ட நிலையில் அந்தத் தொகுதிகள் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு பேரவைச்செயலர் பூபதி கடிதம் எழுதியுள்ளார்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என ஆளுநருக்கு கடிதம் கொடுத்து தனி அணியாக செயல்பட்டு வந்த நிலையில் 18 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்துள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.

இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கையாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தொகுதியை காலியிடம் என அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்த அறிவிப்பு குறித்து உயர் நீதிமன்றத்தை நாட உள்ளதாக தினகரன் தரப்பு அறிவித்துள்ள நிலையில் இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.

காலையில் சபாநாயகர் 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த நிலையில் சட்டபேரவை செயலர் பூபதி மாலையே 18 தொகுதிகளும் காலியாக இருப்பதாக கடிதம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தவிர சட்டமன்ற இணையதளத்திலிருந்து 18 எம்.எல்.ஏக்கள் பெயரை நீக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட 18 தொகுதிகள் விபரம்:

1. கோதண்டபாணி (திருப்போரூர்), 2. முருகன் (அரூர்), 3. பாலசுப்ரமணியன் (ஆம்பூர்), 4.உமாமகேஸ்வரி (விளாத்திகுளம்), 5.முத்தையா (பரமக்குடி), 6.ஏழுமலை (பூந்தமல்லி), 8.பார்த்திபன் (சோளிங்கர்), 9.ஜெயந்திபத்மநாபன் (குடியாத்தம்), 9.சுந்தர்ராஜ் (ஒட்டபிடாரம்), 10.தங்கதுரை (நிலக்கோட்டை), 11.கதிர்காமு ( பெரியகுளம்), 12.வெற்றிவேல் (பெரம்பூர்), 13.ரெங்கசாமி (தஞ்சை), 14.சுப்பிரமணியன் (சாத்தூர்), 15.கென்னடிமாரியப்பன் (மானாமதுரை), 16.செந்தில் பாலாஜி (அரவக்குறிச்சி), 17.தங்கதமிழ்செல்வன் (ஆண்டிபட்டி), 18.பழனியப்பன் (பாப்பிரெட்டிபட்டி)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x