Published : 29 Nov 2014 12:31 PM
Last Updated : 29 Nov 2014 12:31 PM

66 ஆயிரம் பசுமை வீடுகள் தமிழக அரசு திட்டம்

தமிழகத்தில் 31 மாவட்டங்களில் சூரியசக்தி வசதியுடன் 66 ஆயிரம் பசுமை வீடுகள் கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

2015-16ம் நிதியாண்டுக்குள் சூரிய சக்தி வசதியுடன் 3 லட்சம் பசுமை வீடுகள் கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

ஏற்கெனவே சுமார் 1.80 லட்சம் பசுமை வீடுகள் கட்டப்பட்டுள்ள நிலையில், வரும் 2014-15ம் ஆண்டில் 66 ஆயிரம் பசுமை வீடுகள் கட்ட ஊரக வளர்ச்சித் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கான சர்வதேச ஒப்பந்தப் புள்ளி வரும் டிசம்பர் 30-ம் தேதி திறக்கப்பட்டு, சூரியசக்தி அமைக்கும் நிறுவனங்களை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை முடிவு செய்யவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x