Published : 30 Dec 2016 08:57 AM
Last Updated : 30 Dec 2016 08:57 AM

13-வது ஊதிய ஒப்பந்தம் பேச்சுவார்த்தை கோரி 10 தொழிற்சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்: 3000 போக்குவரத்து ஊழியர்கள் பங்கேற்பு

தமிழக அரசு போக்குவரத்து ஊழி யர்களுக்கான 13-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க கோரி பல்ல வன் இல்லத்தில் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உட்பட 10 தொழிற் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இதில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்ப பணியாளர்கள் உட்பட மொத்தம் 1.43 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுவது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில், ஏற்கெனவே போடப்பட்ட 12-வது ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்துள்ளது.

13-வது புதிய ஒப்பந்தம் ஏற்படுத்த கோரி தொழிற்சங்கங் கள் சார்பில் கோரிக்கை மனு நிர்வாகத்திடம் அளிக்கப் பட்டுள்ளது. பின்னர், தொழிற் சங்கங்கள் ஒன்று சேர்ந்து பொது கோரிக்கை மனு உருவாக்கி, அந்த மனுவும் கடந்த மாதம் 21-ம் தேதி நிர்வாகத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழுவை அமைக்கவில்லை.

இந்நிலையில், 13-வது புதிய ஊதிய ஒப்பந்தத்துக்கான பேச்சு வார்த்தையை உடனே தொடங்க கோரி தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் சார்பில் பல்லவன் இல்லம் அருகே நேற்று மாலையில் கண்டன ஆர்ப் பாட்டம் நடத்தப்பட்டது. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் பங்கேற்றனர்.

இதில், தொமுச பொதுச்செய லாளர் மு.சண்முகம் பேசியதாவது:

அரசு போக்குவரத்து ஊழியர் களுக்கான 12-வது ஊதிய ஒப்பந்தம் முடிந்து 4 மாதங்கள் முடியவுள்ள நிலையில், நிர்வாகம் மற்றும் அரசு தரப்பில் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற கோரி போக்குவரத்து துறை அமைச்சரிடமும் நிர்வாகத்திடமும் மனு அளித்துள்ளோம். ஆனால், இதுவரையில் எந்த பேச்சு வார்த்தையும் தொடங்கவில்லை. தொழிற்சங்கங்களுடன் பேச்சு வார்த்தையை உடனே தொடங்க கோரி 10 தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத் தப்பட்டுள்ளது. நிர்வாகம் தொடர்ந்து காலதாமதம் ஏற்படுத்தி னால், அடுத்த கட்டமாக பெரிய அளவிலான போராட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x