Published : 08 Nov 2016 08:45 AM
Last Updated : 08 Nov 2016 08:45 AM

ஸ்ரீரங்கம் உள்ளிட்ட 13 கோயில்களை ஆகம விதிகள்படி புனரமைக்க நிபுணர் குழு: உயர் நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் உள்ளிட்ட 13 பழமைவாய்ந்த புராதன கோயில்களை ஆகம விதிகள் மாறாமல் புனரமைக்க 6 துறை நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் புராதன சின்னங் கள் மற்றும் 13 பழமையான கோயில்களை பராமரிக்க தமிழக அரசு தகுதியான நிபுணர்கள் குழுவை அமைக்கவில்லை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோரைக் கொண்ட முதல் அமர்வு, இதுதொடர்பாக 6 நிபுணர்களின் பெயர்களை உயர்நீதிமன்றத்துக்கு பரிந் துரைக்க அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதியைக் கொண்ட அதே அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத்துறை பரிந்துரை செய்த ஐஐடி கட்டிடக் கலை பேராசிரியர் அருண் மேனன், தொல்லியில் துறை நிபுணர் சி.இ.சத்தியமூர்த்தி, முத்தையா ஸ்தபதி மற்றும் ஆகம நிபுணர் கள் பி.தலசயன பட்டாச்சார்யா (வைணவம்), அருணா சுந்தரம் (சைவம்), மகேஸ்வரி (தொல்லி யல் துறை) ஆகிய 6 பேரைக் கொண்ட குழுவை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்தக் குழு, ஸ்ரீரங்கம் ரெங்க நாதர், சமயபுரம் மாரியம்மன், நெல்லை நெல்லையப்பர் உள்ளிட்ட 13 பழமையான கோயில்களை ஆகம விதிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் சீரமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x