Published : 30 Jan 2017 09:34 AM
Last Updated : 30 Jan 2017 09:34 AM

ஸ்ரீபெரும்புதூரில் பிரம்ம குமாரிகள் மையத்தில் ஒரு நாள் சிறப்பு தியான பயிற்சி முகாம்

ஸ்ரீபெரும்புதூர் அருகே பொடவூர் பகுதியில் செயல்பட்டு வரும் பிரம்ம குமாரிகள் ராஜயோக தியான பயிற்சி மையத்தில், தியானம் தரும் மகிழ்ச்சியான வாழ்க்கை என்ற தலைப்பில் ஒரு நாள் சிறப்பு தியான பயிற்சி முகாம் நேற்று நடை பெற்றது.

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பொடவூர் கிராமத்தில் பிரம்ம குமாரிகள் தியான சிறப்பு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் பிரம்ம குமாரிகள் மையத்தின் 80-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு தியானம் தரும் மகிழ்ச்சி யான வாழ்க்கை என்ற தலைப்பில், சிறப்பு ராஜயோக தியான பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது.

பிரம்ம குமாரிகளின் மூத்த ராஜ யோக பயிற்சியாளர் கலாவதிஜி தலைமை தாங்கி, குத்து விளக் கேற்றி முகாமை தொடங்கி வைத் தார். தமிழக மண்டல சேவை ஒருங் கிணைப்பாளர் பீனாஜி முன்னிலை வகித்தார். இதில் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் அதனை சுற்றி யுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முகாமில் கலந்து கொண்டோ ருக்கு மன இறுக்கம் நீக்கும் வழி கள் பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டு, மகிழ்ச்சியின் திறவுகோள், இறை வனுடன் பேரானந்த அனுபவம் என்ற தலைப்புகளில் காலை முதல் மாலை வரை தியான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

சிவானந்த குருகுலத்தின் பொதுச் செயலாளர் பத்மஸ்ரீ டாக்டர் ராஜாராம், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி முனைவர் வி.கே.சண் முகம், ஓய்வு பெற்ற திருவள்ளூர் மாவட்ட நீதிபதி ஏ.ஆர்.செல்வம், காஞ்சிபுரம் எஸ்.எம்.சில்க்ஸ் உரிமையாளர் மனோகரன், திருத்தணி சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குநர் மலர்விழி, முன்னாள் போலீஸ் அதிகாரி ஜெயபாலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x