Published : 31 May 2016 08:05 AM
Last Updated : 31 May 2016 08:05 AM

வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை ரயில் நிலைய மேம்பால பணிகள் விரைந்து முடிக்கப்படும்: மண்டல ரயில்வே மேலாளர் உறுதி

வேப்பம்பட்டு, செவ்வாப் பேட்டை ரயில் நிலையங்களில் மேம்பால பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மண்டல ரயில்வே மேலாளர் அனுபம் சர்மா கூறினார்.

சென்னை-திருவள்ளூர் வழித்தடத்தில் உள்ள நெமிலிச்சேரி, வேப்பம்பட்டு மற்றும் செவ்வாப்பேட்டை ரயில் நிலையங்களில் ரூ.80 லட்சம் செலவில் புதிதாக பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நெமிலிச்சேரி ரயில் நிலையத்தில் நடைபெற்றது. திருவள்ளூர் தொகுதி மக்களவை உறுப்பினர் பி.வேணுகோபால் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இந்த நிழற்குடையை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆவடி தொகுதி எம்.எல்.ஏ. க.பாண்டியராஜன், பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ., டி.ஏ. ஏழுமலை, ரயில்வே மண்டல மேலாளர் அனுபம் சர்மா ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்குப் பிறகு அனுபம் சர்மா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

கடந்த ஆண்டு ரூ.38 கோடி செலவில் ரயில் நிலையங் களில் பயணிகளுக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப் பட்டன. அதேபோல் இந்த ஆண்டும் அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும். கொரட்டூர் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுரங்கப் பாதை பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதேபோல் வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை ரயில் நிலையங் களில் மேம்பால பணிகளும் விரைந்து முடிக்கப்படும். நெமிலிச் சேரி ரயில் நிலையத்தில் சுரங்கப் பாதை பணிகளும் விரைவில் நிறைவடையும்.

இவ்வாறு அனுபம் சர்மா கூறினார். முன்னதாக, அனுபம் சர்மாவிடம் பல்வேறு பயணி கள் சங்கங்கள் சார்பில் கோரிக் கைகள் அடங்கி மனுக்கள் அளிக்கப்பட்டன.

சென்னை-திருவள்ளூர் வழித்தடத்தில் உள்ள நெமிலிச்சேரி, வேப்பம்பட்டு மற்றும் செவ்வாப்பேட்டை ரயில் நிலையங்களில் புதிதாக பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x