Published : 05 Dec 2015 10:03 AM
Last Updated : 05 Dec 2015 10:03 AM

வெள்ள பாதிப்பால் 90 சதவீதம் பேர் வரவில்லை: வெறிச்சோடிய உயர் நீதிமன்ற வளாகம்- சில மணி நேரம் மட்டுமே விசாரணை நடந்தது

கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக கடந்த இரு நாட்களாக சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 90 சதவீத பணி யாளர்கள், வழக்கறிஞர்கள் வர வில்லை. இதனால், உயர் நீதிமன்ற வளாகம் வெறிச்சோடி காணப் பட்டது. நீதிபதிகளும் 2 மணி நேரத்துக்குள் வழக்கு விசார ணையை முடித்துவிட்டனர்.

சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் அதிக அளவு தண்ணீர் திறப்பால் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தென்சென்னை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி யது. அதனால், தரைதளத்தில் வசித்தவர்களில் ஏராளமானோர் வீடுகளை காலி செய்துவிட்டு வெளியேறினர். பலர், மொட்டை மாடிகளில் தஞ்சம் அடைந்தனர். அடுக்குமாடி வீடுகளில் முடங்கிப் போன மக்கள், குடிநீர்கூட கிடைக்காமல் அவதிப்பட்டனர்.

அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக் கப்பட்டுள்ளது. பெரும்பாலான தனியார் நிறுவனங்களும் விடு முறை விட்டுள்ளன. ஆனால், உயர் நீதிமன்றத்துக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. இருப்பினும், வெள்ளத்தில் சிக்கியதால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசிக் கும் நீதிமன்றப் பணியாளர்கள், வழக்கறிஞர்கள், வழக்கு சம்பந்தப் பட்டவர்கள் வர முடியவில்லை.

இதன்காரணமாக உயர் நீதிமன்ற வளாகம் கடந்த 2 நாட்களாக வெறிச்சோடி காணப்பட்டது. உயர் நீதிமன்றத்தில் சுமார் 2,500 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் 90 சதவீதம் பேர் பணிக்கு வரவில்லை. அதனால், நேற்று சில மணி நேரம் மட்டுமே வழக்கு விசாரணை நடைபெற்றது.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனை வரும் நேற்று பட்டியலிடப்பட்ட வழக்குகளை 2 மணி நேரத்திலேயே முடித்துவிட்டனர். பல வழக்குகளில் வழக்கறிஞர்கள் ஆஜராகாததால் விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை என்பதற்காக எந்த நீதிபதியும் அவர்களுக்கு எதிரான கருத்துகளை பதிவு செய்யவில்லை.

உயர் நீதிமன்றத்துக்கு வந்தி ருந்த ஒரு சில வழக்கறிஞர்களும் பணியாளர்களும் பிற்பகலிலே வீட்டுக்கு புறப்பட்டனர். அவர்கள் கூறும்போது, “மழை வெள்ளத்தால் வீட்டிலிருந்து வெளியே வரவே சிரமப்படுகிறோம். நாங்கள் வசிக் கும் பகுதியைக் கடந்து ரயில் அல்லது பஸ்ஸை பிடித்து நீதி மன்றத்துக்கு வருவதற்குள் கடும் சிரமத்தை சந்திக்க வேண்டி யிருக்கிறது. அதனால்தான் பலர் பணிக்கு வரவில்லை. நாங்களும் வீட்டுக்கு விரைவாக செல்ல வேண் டிய கட்டாயத்தில் இருக்கிறோம். வீடுகளில் கடந்த 4 நாட்களாக மின்விநியோகம் இல்லை. குடிநீர் பாட்டில், மெழுகுவர்த்தி, பேட்டரி செல்கள், கொசுவர்த்தி வாங்கிச் செல்ல வேண்டியுள்ளது’’ என்றனர்.

சென்னை உயர் நீதிமன்றப் பாதுகாப்பில் கடந்த 16-ம் தேதி யில் இருந்து மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட் டுள்ளனர். அவர்கள், நீதிமன்றத் துக்குள் நுழைவோரிடம் அடையாள அட்டையை வாங்கிப் பார்ப்பதும், பார்வையாளர்களையும் அவர் களது உடமைகளையும் சோதிப் பதுமாக சுறுசுறுப்பாக இருப்பார் கள். ஆனால், 2 நாட்களாக நீதி மன்றத்துக்கு பெரும்பாலோர் வரா ததால் பாதுகாப்புப் படையினர், சற்று ரிலாக்ஸாக இருந்ததை காண முடிந்தது.

பணிக்கு வராத பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று உயர் நீதிமன்ற நிர்வாக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘மழை வெள்ளம் காரணமாக அவர்கள் வர இயலவில்லை. அத னால் அவர்களுக்கு ஆப்சென்ட்டோ அல்லது விடுமுறையோ போட மாட்டோம். அவர்களது நிலை மையை கருத்தில்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x