Published : 05 Dec 2015 10:02 AM
Last Updated : 05 Dec 2015 10:02 AM

வெள்ளத்தில் சிக்கிய நண்பரை காப்பாற்றியவர் பலி: நந்தியாற்றில் 3 சடலங்கள் மீட்பு

வெள்ளத்தில் சிக்கிய நண்பனை காப்பாற்றியவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். மேலும் மின் இணைப்பு கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி பலியானார்.

திருவள்ளூர் அருகே உள்ள விடையூர்-பூசாரி தெருவைச் சேர்ந் தவர் பழனி(22). நேற்று நண்பர்களு டன் கொசஸ்தலை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது நண்பரான தேவன் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட் டார். அவரை நீரில் குதித்து காப் பாற்றினார். ஆனால் பழனி வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டார். தக வலறிந்த திருவள்ளூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீவிரமாக தேடி னர். 3 மணி நேரத்துக்குப்பிறகு பழனி சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து, திருவள்ளூர் தாலுக்கா போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் அருகே உள்ள பாடி புதுநகரைச் சேர்ந்தவர் ரஞ்சன்(35). இவர், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஜெ.ஜெ.நகர் (முகப்பேர்) தெற்கு அலு வலகத்தில் ஓயர் மேனாக பணிபுரிந்து வந்தார். கனமழையின் காரணமாக முகப்பேர் உள்ளிட்ட இடங்களில் கடந்த இரு நாட்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந் தது. சற்று மழைவிட்டு, சாலை மற்றும் குடியிருப்புகளில் தேங்கிய மழை நீர் வடிந்ததால் நேற்று மின்வாரிய ஊழியர்கள், ஆங்காங்கே குடியிருப்பு பகுதி களுக்கு மின் இணைப்புகள் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதற்காக முகப்பேர்- கோல்டன் ஜார்ஜ் நகர், முருகன் சுலோச்சனா தெருவில் உள்ள ஒரு மின் கம்பத்தில் ரஞ்சன் ஏறி மின் இணைப்பு கொடுக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அதே இடத்திலேயே ரஞ்சன் உயிரிழந்தார். இதுகுறித்து ஜெ.ஜெ.நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

பெண்கள் சடலம்

பட்டாபிராமபுரத்தைச் சேர்ந்த டில்லிராஜா, அவரது மனைவி பூங்கொடி, சந்தியா, ஜெயந்தி ஆகிய 4 பேர் இரு தினங்களுக்கு முன்பு நந்தியாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். திருத் தணி போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்து சென்று ஆற் றுக்கரையோரப்பகுதியில் இருந்த மரக்கிளையினை பிடித்துத் தொங் கிய டில்லிராஜாவை பாதுகாப்பாக மீட்டனர். மற்ற 3 பெண்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது.

இந்நிலையில் நேற்று காலை, பட்டாபிராம்புரம் அருகே உள்ள டி.புதூர் மற்றும் பள்ளியாங்குப்பம் ஆகிய பகுதிகளில் 3 பெண்களின் சடலமும் மீட்கப்பட்டது.

இதுகுறித்து, திருத்தணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x