Published : 30 Jan 2017 09:23 AM
Last Updated : 30 Jan 2017 09:23 AM

வீடு திரும்பினார் அமைச்சர் எம்.சி.சம்பத்

சென்னை அப்போலோ மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வந்த அமைச்சர் எம்.சி.சம்பத் வீடு திரும்பினார்.

தமிழக தொழில்துறை அமைச் சர் எம்.சி.சம்பத் (58). நேற்று முன்தினம் இவருக்கு கழுத்து மற்றும் தோல்பட்டை பகுதியில் வலி ஏற்பட்டதால், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்த னர்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனைக்கு சென்று சம் பத்தை சந்தித்து உடல்நலம் பற்றி விசாரித்தார். இந்நிலையில் உடல்நிலை குணமடைந்ததைத் தொடர்ந்து நேற்று மாலை அவர் வீடு திரும்பினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x