Published : 08 Nov 2016 08:13 AM
Last Updated : 08 Nov 2016 08:13 AM

விளையாட்டு வீரர் உதவித்தொகை: விண்ணப்பங்கள் வரவேற்பு

பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக விளையாட்டு வீரர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர்-செயலர் ராஜேந்திர குமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஊக்க உதவித்தொகை திட்டத்தின்கீழ் பள்ளி விளையாட்டு வீரர்களுக்கு ரூ.10 ஆயிரமும், கல்லூரி, பல்கலைக்கழக வீரர்களுக்கு ரூ.13 ஆயிரமும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2016-17-ம் கல்வி ஆண்டில் உதவித்தொகை பெறுவதற்கு தகுதி யுடைய விளையாட்டு வீரர்களிட மிருந்து விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகின்றன.

விண்ணப்பதாரர்கள் தேசிய அளவி லான பள்ளி விளையாட்டுக் குழுமம், அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு கழகங்களும் இந்திய விளையாட்டு குழுமமும் நடத்தும் போட்டிகள் மற்றும் அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பத்தின் விலை ரூ.10. விண்ணப்பத்தை அனைத்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் அலுவல கத்தில் பெற்றுக்கொள்ளலாம். மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் (www.sdat.tn.gov.in) இருந்தும் விண் ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஆன்லைனில் விண் ணப்பத்தை பதிவிறக்கம் செய்திருந் தால் ரூ.10-க்கான அஞ்சல் ஆணை அல்லது டிமாண்ட் டிராப்டை விண் ணப்பத்துடன் இணைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை நவம்பர் 31-ம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் அலுவகத்தில் உரிய சான்றிதழ், நகல்களுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்கள் அறிய மேலாளர் கே.சுப்புராஜை 7401703452 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x