Published : 01 Jan 2017 10:58 AM
Last Updated : 01 Jan 2017 10:58 AM

வார்தா புயலால் பாதிப்புக்குள்ளான வண்டலூர் பூங்கா 11-ல் திறக்க திட்டம்: முழுவீச்சில் சீரமைப்பு பணிகள்

வார்தா புயலால் சேதமடைந்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சீரமைப்பு பணி முழுவீச்சில் நடந்துவரு கிறது. பொங்கலுக்கு முன்பாக 11-ம் தேதி பூங்கா திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை வார்தா புயல் கடந்த 12-ம் தேதி தாக்கியது. இதில் ஆயிரக்கணக் கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. மரங்கள் நிறைந்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்காவும் இப்புயலில் பெரிதும் சேதமடைந்தன. இதனால் இவை காலவரையின்றி மூடப்பட்டன.

இதற்கிடையில், பாதிப்புகளை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு செய்து, சீரமைப்பு பணி களை விரைந்து முடிக்க உத்தர விட்டார். மேலும், சீரமைப்பு பணிக்காக முதல்கட்டமாக வனத் துறைக்கு ரூ.2 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடலூர், விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 200 பேர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.

வண்டலூர் பூங்காவில் சாலை கள், பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதை, ஓய்வுக் கூடம், கழிவறை உள்ளிட்டவை சீரமைக்கப்பட்டுள்ளன. விலங்கு கள் வசிப்பிடம் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

மத்திய உள்துறை இணைச் செயலாளர் பிரவீன் வசிஷ்டா தலைமையில் 6 பேர் கொண்ட மத்தியக் குழு வண்டலூர் பூங்காவுக்கு வந்து, பாதிப்புகளை பார்வையிட்டது. வண்டலூர் உயிரியல் பூங்கா மறுசீரமைப்புக்கு ரூ 24 கோடி, கிண்டி சிறுவர் பூங்காவுக்கு ரூ.6 கோடி தேவை என வனத்துறை சார்பில் மத்தியக் குழுவினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகளும் அங்கு முழுவீச்சில் நடந்துவருகிறது.

இதுகுறித்து வண்டலூர் பூங்கா அதிகாரிகள் கூறியதாவது:

புயலுக்குப் பிறகு சீரமைப்பு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. தினமும் ஏராளமான பார்வையாளர்கள் பூங்காவுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். அரையாண்டு விடுமுறை, கிறிஸ்துமஸ், புத் தாண்டு, பொங்கலின்போது, ஏராளமான பார்வையாளர்கள் வண்டலூர் பூங்காவுக்கு வரு வார்கள். குறிப்பாக, காணும் பொங்கல் அன்று கட்டுக்கடங் காத கூட்டம் வரும். இதை கருத்தில் கொண்டு, பொங்கல் பண்டிகைக்கு முன்பாக 11-ம் தேதி பூங்காவை திறக்க திட்ட மிட்டுள்ளோம். பார்வையாளர்கள் நலன் கருதி, சீரமைக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் அவர் களை அனுமதிக்க முடிவு செய் யப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கி றோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர். கிண்டி சிறுவர் பூங்கா 30-ம் தேதி திறக்கப்பட்டது குறிப் பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x