Published : 30 Jan 2017 08:57 AM
Last Updated : 30 Jan 2017 08:57 AM

வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது ஊடகங்களுக்கு பேட்டி அளித்தது ஏன்?- மயிலாப்பூர் துணை ஆணையருக்கு திமுக நோட்டீஸ்

சென்னையில் நடந்த வன்முறை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது ஊடகங்களுக்கு பேட்டி அளித்தது ஏன்? என கேட்டு மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணனுக்கு சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ.அன்ப ழகன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று முன் தினம் ஜெ.அன்பழகன் சார்பில் திமுக வழக்கறிஞர் ஆர்.கிரிராஜன் அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்தக் கோரி மெரினா கடற் கரை பகுதியில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக் கள் அமைதியான முறையில் போராடி வந்தனர். கடந்த 23-ம் தேதி கூட்டத்தைக் கலைக்கும் வகை யில் போலீஸார் எடுத்த நடவடிக் கையால் அப்பாவி பொதுமக்கள், மாணவர்கள், மீனவர்கள், தினக் கூலியை நம்பியிருப்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நடுக்குப்பம், அயோத்தியாகுப்பம், பாரதி சாலை, லாயிட்ஸ் சாலை, அம்பேத்கர் பாலம் பகுதியில் தனி யார் வாகனங்கள், இருசக்கர வாகனங்களுக்கு போலீஸாரே தீ வைத்தனர்.

நடுக்குப்பம் பகுதியில் மீன்சந்தை முழுமையாக எரிந்த தால், மீன் வியாபாரிகளின் வாழ்க்கை மோசமாக பாதிக்கப்பட் டுள்ளது. பல வாகனங்களுக்கு போலீஸாரே தீ வைத்ததற்கு ஆதார மான வீடியோக்கள் உள்ளன. காயமடைந்தவர்களும், பொது மக்களும் போலீஸாரின் இந்த நடவடிக்கைகளுக்கு சாட்சியாக உள்ளனர்.

இது தொடர்பாக பிரதமர், ஆளுநர் உள்ளிட்ட பலருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டா லின் மனு அளித்துள்ளார். சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, 30-ம் தேதி (இன்று) விசார ணைக்கு வருகிறது. அதே நேரம் ஒழுங்கு நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக தடயங்கள், ஆதாரங்களை அழிக்கும் முயற்சி யும் நடந்து வருகிறது.

காவல் துணை ஆணையராக இருக்கும் நீங்கள், கடந்த 26, 28 ஆகிய தேதிகளில் ஊடகங் களுக்கு பேட்டி அளித்துள்ளீர்கள். நீதிமன்றம், மனித உரிமை ஆணை யத்தில் வழக்கு உள்ளபோது நீங்கள் எப்படி பேட்டி அளிக்கலாம்? இது விசாரணை அதிகாரிகளின் நடவடிக்கைகளை பாதிக்காதா? ஐபிஎஸ் அதிகாரியான தங்க ளுக்கு விசாரணை தொடர்பான விஷயங்கள் தெரியாதா? எனவே, தாங்கள் இனி இதுபோன்ற தவறான தகவல்களை ஊடகங்களுக்கு அளிக்கக் கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு நடத்தியதுபோல, வேறு சில கோரிக்கைகளுக்காக இளைஞர்கள், மாணவர்கள் மெரினாவில் மீண்டும் போராட்டம் நடத்தப்போவதாக தகவல் பரவியதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விவேகானந்தர் இல்லம் அருகே பாதுகாப்புக்காக குவிக்கப்பட்ட போலீஸார். (அடுத்தப் படம்) சீரான இடைவெளியில் மெரினா முழுவதும் நிறுத்தப்பட்டுள்ள போலீஸார். (கடைசிப் படம்) 144 தடை காரணமாக, மெரினாவில் நடைபயிற்சி செய்வோர் எண்ணிக்கை வழக்கத்தைவிட நேற்று குறைவாக காணப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x