Published : 31 Jan 2017 08:33 AM
Last Updated : 31 Jan 2017 08:33 AM

வரும் கல்வி ஆண்டில் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் கல்வி கட்டணம் உயர்கிறது: புதிய கட்டணம் நிர்ணயிக்க நீதிபதி பாலசுப்ரமணியன் கமிட்டி முடிவு

தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அடுத்த 3 ஆண்டு களுக்கு கல்வி கட்டணத்தை திருத்தியமைக்க நீதிபதி என்.வி.பாலசுப்ரமணியன் கமிட்டி முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து வரும் கல்வி ஆண்டில் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் கல்விக்கட்டணம் உயர்கிறது.

தமிழகத்தில் அண்ணா பல் கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் என 570-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் பிஇ, பிடெக் படிப்புகளில் ஏறத்தாழ 2 லட்சத்து 90 ஆயிரம் இடங்கள் இருக்கின்றன. சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் குறிப்பிட்ட சதவீத எண்ணிக்கையிலான இடங்கள் அரசு ஒதுக்கீடு மூலமாகவும், எஞ்சிய இடங்கள் அந்தந்த கல்லூரி நிர்வாகங்கள் மூலமாகவும் நிரப்பப்படும்.

அரசு ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப் படும் பிஇ, பிடெக், பி.ஆர்க். இடங்களுக்கும் அதேபோல், எம்இ, எம்டெக், எம்ஆர்க் மற்றும் எம்பிஏ, எம்சிஏ இடங்களுக்கும் நீதிபதி என்.வி.பாலசுப்ரமணியன் தலைமையிலான சுயநிதி தொழிற் கல்லூரி கல்விக்கட்டண நிர்ணயக் குழு கட்டணத்தை நிர்ணயம் செய்கிறது. அந்த வகையில், கடந்த 2013-14-ம் ஆண்டில் கல்விக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு அது நடப்பு கல்வி ஆண்டு (2016-17) வரையில் நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், சுயநிதி பொறி யியல் கல்லூரிகளில் வரும் கல்வி ஆண்டு முதல் அடுத்த 3 ஆண்டு களுக்கு கல்விக்கட்ட ணத்தை திருத்தியமைக்க நீதிபதி என்.வி.பாலசுப்ரமணியன் கமிட்டி முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, கல்லூரி நிர்வாகங்கள் எதிர்பார்க்கும் உத்தேச கல்விக்கட்டண விவரங்களை தேவையான ஆவணங்களுடன் பிப்ரவரி மாதம் 28-ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு தமிழகத்தில் உள்ள அனைத்து சுயநிதி பொறி யியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் அக்கமிட்டி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒவ்வொரு கல்லூரியிடமிருந்தும் பெறப்படும் கல்விக்கட்டண விவரங்கள் ஆய்வுசெய்யப்பட்டு புதிய கல்விக்கட்டணம் நிர்ணயிக் கப்படும் என்று கமிட்டியின் உயர் அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறினார்.

புதிய கட்டணம் நிர்ணயிக்கப் படுவதை தொடர்ந்து வரும் கல்வி ஆண்டில் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் கல்விக்கட்டணம் அதிகரிக்கும். கல்விக்கட்டணத்தில் டியூஷன் கட்டணம், மாணவர் சேர்க்கை கட்டணம், சிறப்பு கட்டணம், ஆய்வகம், கணினி, இண்டர்நெட், நூலகம், விளை யாட்டு, பராமரிப்பு கட்டணம் உள்ளிட்ட அனைத்து விதமான கட்டணங்களும் அடங்கும்.

தற்போது வசூலிக்கப்படும் கல்விக்கட்டணம்

பிஇ, பிடெக் (“நாக்” அங்கீகாரம்) ரூ.45,000 (ஓராண்டுக்கு)

பிஇ, பிடெக் (சாதாரணம்) ரூ.40,000 (ஓராண்டுக்கு)

எம்இ, எம்டெக் (நாக் அங்கீ காரம்) ரூ.30,000 (ஓராண்டுக்கு)

எம்இ, எம்டெக் (சாதாரணம்) ரூ.25,000 (ஓராண்டுக்கு)

எம்பிஏ, எம்சிஏ (நாக் அங்கீகாரம்) 18,000 (ஒரு செமஸ் டருக்கு)

எம்பிஏ, எம்சிஏ (சாதாரணம்) ரூ.15,000 (ஒரு செமஸ்டருக்கு)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x