Published : 05 Jan 2017 10:13 AM
Last Updated : 05 Jan 2017 10:13 AM

வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்தது: 1876-க்குப் பிறகு மோசமான வறட்சி

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந் திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வடகிழக்கு பருவ மழையானது, தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங் களில் இருந்து விலகிவிட்டதாக அறிவிக்கப்படுகிறது. கடந்த ஆண் டில் வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட 62% குறைவாக பெய்துள்ளது. கடந்த 142 ஆண்டுகளை எடுத்துக் கொண்டால், 1876-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் 63% குறைவாக மழை பெய்ததே, அதிகபட்ச மழை குறைவாக உள்ளது.

கடந்த அக்டோபர் மாதத்தை பொறுத்தவரை இயல்பை விட 64% குறைவாகவும், நவம்பர் மாதம் 80% குறைவாகவும், டிசம்பர் மாதம் 24% குறைவாகவும் மழை பெய்துள்ளது.

கடந்த ஓராண்டில் பெய்த மழை அளவை பொறுத்தவரை, இயல்பை விட 41% குறைவாக மழை பெய்துள்ளது.

2016-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை, தமிழகத்தில் 26 மாவட்டங்களில் 50 சதவீதத்துக்கு மேல், இயல்பை விட மழை குறைவாக பெய்துள்ளது. அதிகபட்சமாக கடலூர், புதுச்சேரி, நாமக்கல் மாவட்டங்களில் 81 சதவீதம் இயல்பை விட மழை குறைவாக பெய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x