Published : 01 Jan 2017 02:42 PM
Last Updated : 01 Jan 2017 02:42 PM

வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்தும்கூட ரூ.10 நாணயங்களை வாங்க மறுக்கும் வியாபாரிகள்

10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என வங்கி அதிகாரிகள் பலமுறை விளக்கமளித்தும்கூட வியாபாரிகள், பேருந்து நடத்துநர்கள் நாணயங்களை தொடர்ந்து வாங்க மறுப்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

மத்திய அரசின் ரூ. 500, ரூ. 1000 பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் காத்துக்கிடந்து பழைய நோட் டுகளை மாற்றினர். அதேவேளையில் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிட்ட வங்கிகள் 10 ரூபாய் நாணயங்களையும் புதிதாக வெளியிட்டன. இதனால் 10 ரூபாய் நாணயங்களின் எண்ணிக்கை முன்பு இருந்ததைவிட அதிகளவில் புழக்கத்துக்கு வந்தன. ஆனால் 10 ரூபாய் நாணயங்களும் மதிப்பு நீக்கப்பட்டதாக கடந்த ஒரு மாதத்துக்கு முன் வதந்தி பரவியது. இதனால் கடைகளில் நாண யங்களை வாங்க வியாபாரிகள் மறுத்துவிட்டனர். பேருந்து ஓட்டு நர்களும் பயணிகளிடம் வாங்க மறுத்தனர். இத்தகவல் வெறும் புரளிதான். நாணயங்களை வியாபாரிகள் தாராளமாக வாங்கிக்கொள்ளலாம் என வங்கி அதிகாரிகள் பலமுறை விளக்கம் அளித்தும் கூட நாணயங்களை வாங்க மறுப்பது இன்றுவரை தொடர்கிறது.

இதுகுறித்து மதுரை டவுன்ஹால் ரோட்டை சேர்ந்த வியாபாரி முகம்மது காதர் கூறியது: மதுரையில் உள்ள தேநீர் கடை, காய்கறிக் கடை உள்ளிட்ட பெரும்பாலான கடைகளில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். வங்கி அதிகாரிகள் செல்லும் என பலமுறை விளக்க மளித்துவிட்டனர். ஆனாலும், 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பது அரசை அவமா னப்படுத்துவது போன்றதாகும். எனவே நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். வாடிப்பட்டி அருகே உள்ள மேலக்கால் கிராமத்தை சேர்ந்த நாகசாமி கூறியது: 10 ரூபாய் நாணயங்களை கடைகளில் வாங்க வியாபாரிகள் மறுக்கின்றனர். வங்கிகளிலும்கூட நோட்டை மட்டுமே கொடுக்குமாறு கூறி, நாணயங்களை வாங்க அதிகாரிகள் மறுக்கின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமமடைகின்றனர் என்றார்.

இதுதொடர்பாக பேருந்து நடத்துநர்கள் கூறியது: பயணி களிடம் 10 ரூபாய் நாணயங்களை வாங்க நாங்கள் தயாராக உள்ளோம்.

ஆனால், ஒருவர் கொடுத்த நாணயத்தை மற்றவரிடம் கொடுத்தால் அவர்கள் வாங்க மறுக்கின்றனர். போக்குவரத்து பணிமனைகளிலும் பெருமளவில் நாணயங்கள் வாங்குவதைக் குறைத்துக் கொள்ளுமாறு கூறுகின்றனர் என தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x