Published : 30 Jan 2017 09:46 AM
Last Updated : 30 Jan 2017 09:46 AM

லஞ்சம், ஊழல் ஒழிய லட்சிய நடை பயணம்: 30 ஆண்டுகளாக வாகனத்தில் ஏற மறுக்கும் பந்தலூர் இளைஞர்

நீலகிரி மாவட்டம் பந்தலூரைச் சேர்ந்தவர் அ.நெளசாத்(34). இவர், எந்த வாகனத்திலும் ஏறிப் பயணம் செய்யாமல், தொடர்ந்து நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

இது தொடர்பாக ‘தி இந்து’ விடம் அவர் கூறும்போது, ‘‘3 வயது இருக்கும்போது, வாகனத்தில் பயணம் செய்வதால் பயம் ஏற்பட்டது. அன்று முதல் நடந்தே வருகிறேன். எங்கு சென்றாலும் நடந்தே செல்கிறேன். அதிகபட்சமாக 25 கி.மீ. தொலை வில் உள்ள கூடலூருக்கு மட்டுமே 2 முறை சென்றுள்ளேன். மேலும், பந்தலூரை அடுத்த சேரம்பாடி, அத்திக்குன்னா, தேவாலா ஆகிய பகுதிகளுக்கு நடந்தே செல்வேன்.

வாகனத்தின் மீதான பயம் காரணமாக நடந்து சென்றுவரும் நான், ஊழல், லஞ்சம் ஒழியும் போது மீண்டும் வாகனப் பயணம் மேற்கொள்ளலாம் என்ற லட்சி யத்தை ஏற்றுள்ளேன்” என்றார்.

இவரது தந்தை அப்துல் லத்தீஃப் கூறும்போது, ‘‘நெளசாத்துக்கு 4 சகோதரர்கள், சகோதரி உள்ள னர். அனைவருக்குமே திருமண மாகிவிட்டது. கோவையில் நடந்த சகோதர, சகோதரிகள் திருமணத்தில்கூட அவர் பங்கேற்க வில்லை. எங்கும் நடந்தே செல்வ தால், அப்பகுதிகளின் செல்லப் பிள்ளையாகிவிட்டான். இவ னுக்கு திருமணம் செய்ய வேண்டுமானால், உள்ளூரில்தான் பெண் பார்க்க வேண்டும். பெண் வாகனத்தில் சென்றாலும், இவன் நடந்துதான் வருவான்” என்றார் புன்னகையுடன்.

முதலில் புறப்பட்டு விடுவான்

நெளசாத்தின் பள்ளித் தோழர் சு.சிவசுப்ரமணியம் கூறும்போது, “சிறுவயதில் இருந்தே நெளசாத் வாகனத்தில் பயணிக்க மாட்டார். அருகே உள்ள கிராமங்களுக்கு விளையாடச் செல்லும்போது, முதலில் புறப்பட்டுவிடுவார். அதன் பிறகுதான் நாங்கள் வாகனத்தில் செல்வோம்.

பந்தலூரில் உள்ள ரேஷன் கடையில் எடை போடுபவராக பணிபுரியும் நெளசாத், தனது காய்கறிக் கடையிலும் தந்தைக்கு உதவியாக இருக்கிறார்.

சந்திப்பு... இனிப்பு...

இதில் கிடைக்கும் வருவாயில், தன்னை தினமும் சந்திப்பவர்களின் ‘சந்திப்பு’ இனிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக, 2 கிலோ மிட்டாய் வாங்கி வழங்கி வருகிறார்.

இவரது நடவடிக்கையை சிலர் கேலி செய்தாலும், தொடர்ந்து நடைப் பயணத்தை மேற்கொண்டு வரும் இவரை பெற்றோரும், சகோதர, சகோதரியும் ஊக்குவித்து வருகின்றனர்” என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x