Published : 01 Jan 2017 11:41 AM
Last Updated : 01 Jan 2017 11:41 AM

ரூ.6 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டிய காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் இடைநீக்கம்: வேலூர் சரக டிஐஜி உத்தரவு

ரூ.6 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டிய புகாரில் திருவண்ணா மலை மாவட்ட செம்மர கடத்தல் தடுப்புப் பிரிவு தனிப்படை ஆய் வாளர் புகழ், உதவி ஆய்வாளர் கணபதி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து டிஐஜி தமிழ்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறும்போது, ‘‘திரு வண்ணாமலை மாவட்டம் ஜவ் வாது மலைக் கிராமத்தினர் ஆந் திர மாநிலம் திருப்பதி வனப் பகுதியில் செம்மரம் வெட்ட அதிகளவில் செல்வதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து மரம் வெட்டும் கூலித் தொழி லாளிகள், அவர்களை அழைத்துச் செல்லும் ஏஜென்ட்டுகளை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, கீழ்பென்னாத்தூர் காவல் ஆய்வாளர் புகழ், ஆரணி தாலுகா காவல் உதவி ஆய்வாளர் கணபதி மற்றும் போலீஸார் அடங்கிய தனிப் படையினர் செம்மரக் கடத்தலில் தொடர்புடைய ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த மதன் என்பவரை சந்தேகித்தனர்.

இதுதொடர்பாக, தனிப்படை ஆய்வாளர் புகழ், உதவி ஆய் வாளர் கணபதி ஆகியோர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு விசாரணைக்காக மதன் மற்றும் அவரது கார் ஓட்டுநர் சதீஷ் ஆகி யோரை அழைத்துச் சென்றனர். அப்போது, செம்மரக் கடத்தல் வழக்கில் கைது செய்யாமல் இருக்க ரூ.6 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்று பேரம் பேசினர். இதற்கு சம்மதித்த மதன், முதல் கட்டமாக ரூ.1 லட்சம் பணம் கொடுத்துள்ளார். பாக்கித் தொகையை கொடுக்காமல் மதன் காலம் கடத்திவந்தார்.

பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக, ஆய்வாளர் புகழ், உதவி ஆய்வாளர் கணபதி ஆகியோரிடம் மதன் செல் போனில் பேசிய பேச்சுகளை பதிவு செய்து, வடக்கு மண்டல ஐஜி செந்தாமரைக் கண்ணனிடம் புகாராக கொடுத்தார். குற்றச்சாட்டு களின் அடிப்படையில், ஆய் வாளர் புகழ், உதவி ஆய்வாளர் கணபதி ஆகியோரை சஸ் பெண்ட் செய்து வேலூர் சரக டிஐஜி தமிழ்சந்திரன் நேற்று உத்தர விட்டார்’’ என தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x