Published : 22 Mar 2017 07:45 AM
Last Updated : 22 Mar 2017 07:45 AM

ரூ.2,300 கோடி நிலுவை தொகைக்காக சென்னையில் கரும்பு விவசாயிகள் போராட்டம்

சர்க்கரை ஆலைகள் கொடுக்க வேண்டிய ரூ.2,300 கோடி நிலுவைத் தொகையை பெற்று தரக்கோரி கரும்பு விவசாயிகள் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:

நடப்பாண்டில் ஒரு டன் கரும்புக்கு ரூ.2,750 அறிவிக் கப்பட்டுள்ளது. கரும்பு கொள் முதல் விலையை மாநில அரசு உயர்த்தி அறிவித்தாலும் தனியார் சர்க்கரை ஆலைகள் மத்திய அரசின் விலையை மட்டுமே கொடுக்கின்றன.

இதன் அடிப்படையில் 24 தனியார் சர்க்கரை ஆலைகள் ரூ.1,500 கோடியும் 18 கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலை கள் ரூ.450 கோடியும் விவசாயி களுக்கு பாக்கி வைத்துள்ளன.

இதன் அடிப்படையில் 24 தனியார் சர்க்கரை ஆலைகள் ரூ.1,500 கோடியும் 18 கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலை கள் ரூ.450 கோடியும் விவசாயி களுக்கு பாக்கி வைத்துள்ளன.

மேலும், 2004-09 ஆண்டு பருவ காலங்களுக்கான லாப பங்குத் தொகை ரூ.350 கோடியையும் தர மறுக்கின்றன. 4 ஆண்டுகளில் ஒட்டு மொத்த மாக விவசாயிகளுக்கு சேர வேண்டிய ரூ.2,300 கோடியை பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அமைச்சர் பேச்சுவார்த்தை

கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், சர்க் கரை துறை ஆணையர் மகேசன் காசிராஜன் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகிகள், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் அரசு தரப்பு அதிகாரிகள் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு மார்ச் மாத இறுதியில் ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்தார். கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைகள் 3 ஆண்டுகளில் தரவேண்டிய நிலுவை தொகையில் ரூ.44 கோடி நாளை (இன்று) பட்டுவாடா செய்யப்படும், மீத முள்ள தொகை ஏப்ரல் மாதத் துக்குள் வழங்கப்படும் என்றார். இதையடுத்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x