Published : 30 Dec 2016 10:00 AM
Last Updated : 30 Dec 2016 10:00 AM

மோடி அரசுக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

மோடி அரசின் மக்கள் விரோத செயல்களை தடுத்து நிறுத்த அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கோரிக்கை விடுத் துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:

நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளில் 86 சதவீதம் 500, 1000 ரூபாய் நோட்டுகளாகும். இவற்றை ஒரே இரவில் செல்லாது என அறிவித்ததால் மக்கள் பெரும் துயரங்களுக்கு ஆளாகியுள்ளனர். நீக்கப்பட்ட நோட்டுகளுக்கு இணை யாக புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படாததால் பணத்தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது.

அறிவிப்பு வெளியாகி 50 நாட்களாகியும் வங்கிகள், ஏடிஎம் களில் பல மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. மத்திய அரசு அறிவித்த காலக்கெடு முடிந்துள்ள நிலையில் இதுவரை எவ்வளவு கறுப்புப் பணம் மீட்கப்பட்டுள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அறிவித்த அரசு தற்போது ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு தயாராகுமாறு அடுத்தகட்ட நிலைக்கு மாறியுள்ளது.

98 சதவீத மக்கள் ரொக்கப் பரிவர்த்தனை மேற்கொண்டு வருவதை கணக்கில் கொள்ளாமல் ரொக்கமில்லா பரிவர்த்தனை பற்றி பேசுவது சரியானது அல்ல. எனவே, மோடி அரசின் மக்கள் விரோத செயல்களை தடுத்து நிறுத்த அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x