Published : 28 Jun 2016 08:49 AM
Last Updated : 28 Jun 2016 08:49 AM

முல்லை பெரியாறில் புதிய அணை: கேரள அரசைக் கண்டித்து ஜூலை 19-ல் உண்ணாவிரதம் - அனைத்து விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

முல்லை பெரியாறில் புதிய அணை கட்டப்படும் என்ற கேரள அரசின் அறிவிப்பைக் கண்டித்து, ஜூலை 19-ம் தேதி தேனி மாவட்டம் கூட லூரில் உண்ணாவிரதப் போராட் டம் நடத்தப்படும் என்று அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப் பாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள அறிக்கை: தமிழக விவ சாயிகள் பல்வேறு நெருக்கடி களுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த ஆண்டும் குறுவை சாகுபடி இல்லை என்பது உறுதியாகிவிட்டது. ஒரு போக சம்பா சாகுபடிக்காவது, கர்நாடகம் தண்ணீர் கொடுக்குமா என்பது கேள்விக்குறியாகி உள் ளது.

கர்நாடக மாநிலத்தில் மழை பெய்து, அதிக அளவில் தண்ணீர் உள்ளது. ஆனால், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி, தமிழகத் துக்கு உரிய நீரைத் தராமல் அம் மாநிலம் மவுனம் காத்து வருகிறது.

இது தொடர்பாக பிரதமரை நேரில் சந்தித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். ஆனால், இந்த சந்திப்பு குறித்து பிரதமர் அலுவலகம் எந்த விவர மும் தெரிவிக்காமல் இருப்பது, விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தேசியமயமாக்கப்பட்ட வங்கி களில், விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பெற்றுள்ள கல்விக் கடனுக்கு, 13.75 சதவீதம் வட்டி நிர்ணயித்து, மாணவர் களையும், விவசாயக் குடும்பங் களையும் அச்சுறுத்துகின்றனர். மேலும், விவசாயக் கடன்களுக் காக அடகு வைக்கப்பட்ட நகை களை ஏலம் விடுவோம் என்றும் அச்சுறுத்துவது வேதனையளிக் கிறது. கடன்களுக்காக வங்கிகள் நிர்ப்பந்தம் செய்தால், தமிழகம் முழுவதும் உள்ள வங்கிகளுக்கு பூட்டுபோடும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவோம் என்று ஆளுநர் உரை மூலம் கேரள அரசு அறிவித் துள்ளது சட்டத்துக்குப் புறம்பானது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் அரசாணைக்கு எதிரான இந்த அறிவிப்பு, அரசியலமைப்புச் சட்டத்துக்கு விடப்பட்ட சவாலாகும். எனவே, இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட்டு, கேரள ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முல்லை பெரியாறில் அணை கட்டுவதை தடுக்கக் கோரி, ஜுலை 19-ல் தேனி மாவட்டம் கூடலூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளோம். இதில், ஏராளமான விவசாயிகள் பங்கேற்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x