Published : 03 Jul 2017 08:07 AM
Last Updated : 03 Jul 2017 08:07 AM

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு: தமிழகம் முழுவதும் 2 லட்சம் பேர் எழுதினர்

தமிழகத்தில் காலியாக உள்ள 3375 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி யிடங்களுக்கான தகுதித் தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடை பெற்றது.

தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1663 முது நிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங் களுக்கு தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. அதன் பின்னர் மேலும் 1712 இடங்கள் தேர்வு மூலம் நிரப்பப்படும் என அறிவிக் கப்பட்டது. இதன்படி மொத்தம் 3375 பணியிடங்களுக்கான எழுத் துத் தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

சென்னையில் 15,100 பேர்

இந்தத் தேர்வை எழுத 2.19 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். தமிழகம் முழுவதும் அமைக்கப் பட்டிருந்த 601 மையங்களில் இவர்கள் தேர்வை எழுதினர். சென்னையில் மட்டும் 41 மையங் களில் 15,100 பேர் எழுதினர். காலை 10 மணி முதல் 1 மணி வரை தேர்வு நடைபெற்றது.

தேர்வு அறைக்குள் 2 பேனாக் கள், தேர்வுக்கூட அனுமதி சீட்டு, அடையாள அட்டை ஆகிய வற்றை மட்டுமே எடுத்துச் செல்ல தேர்வர்களை அதிகாரிகள் அனுமதித்தனர். செல்போன், கால் குலேட்டர், டிஜிட்டல் கை கடி காரம், கைக்குட்டை ஆகிய பொருள்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும் தேர்வு நடைபெற்ற மையங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டி ருந்தது. மாவட்ட அளவில் தேர்வு குழுத் தலைவர்களாக நியமிக் கப்பட்டிருந்த அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தேர்வு மையங்க ளில் திடீர் ஆய்வுகளை மேற் கொண்டனர். மேலும் தேர்வு நடைமுறைகள் வீடியோ காட்சிக ளாக பதிவு செய்யப்பட்டன.

தமிழ், ஆங்கிலம், இயற்பியல், கணிதம், வேதியியல் உள்ளிட்ட 15 பாடங்களுக்கான தேர்வுகள் நேற்று நடைபெற்றன. தேர்வு முடிவுகள் செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x