Published : 22 Mar 2017 11:27 AM
Last Updated : 22 Mar 2017 11:27 AM

மின் கட்டணத்தை மாற்றியமைக்க ரூ.8,500 லஞ்சம் பெற்ற கணக்கீட்டாளர் கைது: லஞ்ச ஒழிப்புப் போலீஸார் நடவடிக்கை

மின் கட்டணத்தை மாற்றியமைக்க, மென்பொருள் பொறியாளரிடம் ரூ.8,500 லஞ்சம் வாங்கிய மின் வாரிய கணக்கீட்டாளரை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கைது செய்தனர்.

வேலூர் வசந்தபுரம் ராம சாமி முதலியார் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (34). பெங்களூருவில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்கிறார். இவருக்குச் சொந்தமான குடோன் வீட்டுக்குப் பக்கத்திலேயே உள் ளது. காலியாக இருக்கும் இந்த குடோனை வீடாகப் பயன்படுத்த செந்தில்குமார் முடிவு செய்தார்.

இதற்காக, வணிகப் பயன் பாட்டுக்கான குடோனின் மின் இணைப்பை வீட்டு உபயோகத் துக்கான மின் இணைப்பாக மாற்றித் தருமாறு, வேலூர் மேற்கு மின்வாரிய இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அதன்படி, மின்வாரிய கணக் கீட்டாளர் ஜெயகுமார் (40) சில நாட்களுக்கு முன்பு குடோனில் ஆய்வு செய்தார்.

அப்போது, ‘குடோனின் மின் இணைப்புக்கான கட்டணம் தவறாக நிர்ணயம் செய்யப்பட் டுள்ளதாகவும், ரூ.38 ஆயிரத்து 700 செலுத்தினால் மட்டுமே வீட்டு உபயோகப் பயன்பாட்டுக்கான மின் இணைப்பை வழங்க முடியும்’ என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அவ்வளவு பணத்தை ஏன் கட்ட வேண்டும் என்று செந்தில்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது, ரூ.10 ஆயிரம் பணம் கொடுத்தால் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் மின் இணைப்பை மாற்றிக் கொடுப்பதாக செந்தில் குமாரிடம் ஜெயக்குமார் உறுதி யளித்துள்ளார். இறுதியாக ரூ.8 ஆயிரத்து 500 தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

பணத்தைக் கொடுக்க விரும் பாத செந்தில்குமார், வேலூர் லஞ்ச ஒழிப்புப் போலீஸாரிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை செந்தில்குமாரிடம் போலீஸார் கொடுத்தனுப்பினர்.

அந்தப் பணத்தை நேற்று ஜெயக்குமார் பெற்ற போது, லஞ்ச ஒழிப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பால சுப்பிரமணியன் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x