Published : 06 Oct 2016 07:56 AM
Last Updated : 06 Oct 2016 07:56 AM

மாநிலம் முழுவதும் ஆதார் மையங்கள் செயல்படத் தொடங்கின: சென்னையில் 64 மையங்கள் செயல்படுகின்றன

தமிழகம் முழுவதும் நேற்று முதல் ஆதார் நிரந்தர மையங்கள் செயல்படத் தொடங்கின.

அக்டோபர் 1-ம் தேதி முதல், தமிழகத்தில் ஆதார் பதிவுகளை மேற்கொள்ள, யூஐடிஏஐ நிறு வனத்திடம் தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அனுமதி பெற்றுள்ளது. அத்துறையின் கீழ் செயல்படும் அரசு கேபிள் டிவி நிறுவனம் மற்றும் எல்காட் ஆகியவற்றிடம் ஆதார் பதிவு செய்யும் பணி வழங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் ஆதார் நிரந்தர மையங்களில் ஆதார் பதிவு நடைபெறவில்லை. இதனால் கடந்த மாதம், அக்டோபர் 1, 3, 4 ஆகிய தேதிகளில் வருமாறு டோக்கன் வழங்கப்பட்டவர்கள், ஆதார் மையங்களுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில் நேற்று எல்லா மையங்களுக்கும் பணியாளர்கள் வந்திருந்தனர். அவர்கள் பயன் படுத்துவதற்கான உபகரணங் களும் பயன்படுத்தும் வகையில் பொருத்தப்பட்டிருந்தன. ஆதார் பதிவு கோரி வந்திருந்தவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. பூர்த்தி செய்து வழங்கியோருக்கு, அசல் இருப்பிடச் சான்று மற்றும் புகைப்பட அடையாளச் சான்று ஆகியவை வைத்திருப்போருக்கு ஆதார் பதிவு செய்யப்பட்டது.

ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள ஆதார் மையத்துக்கு, ஆதார் பதிவுக்காக வந்திருந்த புரசை வாக்கத்தைச் சேர்ந்த சந்தானம் கூறும்போது, “நான் கடந்த 4 நாட்களாக வந்து கொண்டிருக்கிறேன். இன்றுதான் செயல்படத் தொடங்கியுள்ளது. ஆதார் பதிவு செய்துவிட்டேன்” என்றார்.

இதுபற்றி அரசு கேபிள் டிவி நிறுவனத்திடம் கேட்டபோது, “இதுநாள் வரை பாரத் எலக்ட் ரானிக்ஸ் நிறுவனம் பயன் படுத்தி வந்த ஆதார் பதிவு உபகரணங் களில் பதிவாகியுள்ள அனைத்து தகவல்களையும், யூஐடிஏஐ-க்கு அனுப்பிவிட்டு, உபகரணங்களில் உள்ள அனைத்து தகவல்களையும் அழித்த பின்னரே, அவை எங்களிடம் வழங்கப்பட்டது. பாரத் எலக்ட்ரானிக்ஸ் பயன் படுத்திய பணியாளர்கள் அனை வரும், யூஐடிஏஐயை நிறுவ னத்தால் தேர்வு நடத்தி அங்கீ கரிக்கப்பட்டவர்கள். ஒவ்வொரு ஆதார் பதிவுக்கும், அவர்களின் கைரேகை மூலமாக உறுதி செய்யப்படும். அவர்களையே நாங்களும் பயன் படுத்திக்கொள்ள இருக்கிறோம்.

அவர்களை எங்கள் நிறுவன பணியாளர்களாக மாற்று வதற்கான நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டது. அதற்கான நடைமுறைகளும் முடிந்துள்ளன. இக்காரணங்களால் கடந்த இரு நாட்களாக ஆதார் மையங்கள் செயல்படவில்லை. தற்போது அனைத்து மையங்களும் செயல்படத் தொடங்கியுள்ளன. சென்னையில் 64 மையங்களும், தமிழகம் முழுவதும் 339 மையங்களும் செயல்படத் தொடங்கியுள்ளன” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x