Published : 30 Jan 2017 09:08 AM
Last Updated : 30 Jan 2017 09:08 AM

மலை, சுற்றுலா ரயில் பாதைகளை தனியார்மயமாக்குவதை கைவிட வேண்டும்: டிஆர்இயு வலியுறுத்தல்

பாரம்பரிய மலை ரயில் மற்றும் சுற்றுலா பாதைகள் நீண்ட காலத் துக்கு தனியார்மயமாக்குவதற்கு பணிகள் நடந்து வருகின்றன. இந்த முயற்சியை கைவிட வேண்டுமென தட்சிண ரயில்வே எம்ப்ஸாயிஸ் யூனியன் (டிஆர்இயு) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பின் துணைப் பொது செயலாளர் மனோகரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாரம்பரிய மலை ரயில் பாதை கள், சுற்றுலாப் பாதைகள் அனைத் தும் தனியார் மயமாகிறது. இதற் காக ரயில்வே துறை பெரும் நிறுவனங்களுக்கு நீண்டகால குத்தகைக்கு வழங்க திட்டமிட்டு இருக்கிறது. இதற்கான நடவடிக் கைகள் விரைவில் மேற்கொள்ள உள்ளது. தனியார்மய நடவடிக் கையை நாங்கள் முற்றிலும் எதிர்க் கிறோம்.

ஒரு லட்சத்து 8 ஆயிரம் கி.மீ. நீளம் 90 கிளை பாதைகளில் சமூக தேவைகளுக்காக, ரயில்கள் இயக்கப்படுகிறது.

இவை மீட்டர் கேஜ், நேரோ கேஜ் வகை பாதைகளாக உள்ளன. மலைப் பாதைகளும் இதில் அடங்கும். இந்த பாதைகளால் ஆண்டு ஒன்றுக்கு ரூ.1, 466 கோடி ரயில்வேக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இந்த நஷ்டம் மானியமாக கணக்கிடப்படுகிறது.

தற்போதைய ரயில்வே மானியச் செலவு மட்டும் ரூ.33,000 கோடி ஆகும். இதனால் இந்தப் பாதைகளை குத்தகைக்கு விட முயற்சித்தது. யுனெஸ்கோ அறிவித்த உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் சிலிகுரி - டார்ஜிலிங் பாதை மற்றும் மேட்டுப்பாளையம் - ஊட்டி, கல்க்கா - சிம்லா உள்ளிட்ட சுற்றுலாப் பாதைகளில் தனியார் மற்றும் அந்நிய நிறுவனங்கள் குத்தகைக்கு எடுக்க ஆர்வம் காட்டுகின்றன. இந்த முயற்சியை ரயில்வே துறை கைவிட வேண்டும். இல்லாவிட்டால் தற்போது உள்ளதைக் காட்டிலும் சுற்றுலா இடங்களில் தனியார் நிறுவனங்கள் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி வசூலிப்பார்கள். இதனால் பொதுமக்கள் பாதிக்கப் படுவார்கள்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x