Published : 16 May 2016 12:01 PM
Last Updated : 16 May 2016 12:01 PM

மலை கிராமங்களுக்கு குதிரைகளில் செல்லும் வாக்குப்பதிவு இயந்திரங்கள்

சாலை வசதியில்லாத மலை கிராமங்களுக்கு நேற்று குதிரைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுசெல்லப்பட்டன.

தேனி மாவட்டம், போடி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கொட்டகுடி, குரங்கணி, கொழுக்கு மலை, காரிப்பட்டி, சென்ட்ரல் ஸ்டேஷன், டாப் ஸ்டேஷன், போடிமெட்டு, அகமலை, கண்ணக்கரை, ஊரடி, ஊத்துக்காடு ஆகிய மலை கிராமங் களில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் சென்ட்ரல் ஸ்டேஷன், ஊரடி, ஊத்துக்காடு ஆகிய மலை கிராமங்கள் வாகனங்கள் எதுவும் செல்ல முடியாத அளவில் கரடு முரடான மலைப்பாதையாக உள் ளது. சென்ட்ரல் ஸ்டேஷனில் 185 பேரும், ஊரடி, ஊத்துக்காடில் 485 பேரும் வாக்களிக்க உள்ள னர். இவர்கள் வாக்களிக்க ஏதுவாக நேற்று போடி தொகுதி தலைமை வாக்குப்பதிவு அலுவலர் பாலகுரு நாதன் தலைமையில் வாக்குப்பதிவு அலுவலர்கள் ராஜேஷ்கண்ணன், பாலகுருநாதன் ஆகியோர் துப் பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப் புடன் வாக்குப்பதிவு இயந்திரங் களை குதிரைகள் மூலம் கொண்டு சென்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு இயந்திரங்களை அனுப்பும் பணி நேற்று நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து திண்டுக்கல் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்டன. மின்னணு இயந்திரங்கள் அனுப்பப்படுவதை மாவட்ட ஆட்சியர் சத்யபிரத சாகு ஆய்வு செய்தார்.

பழநி தொகுதிக்கு உட்பட்ட கொடைக்கானல் மலைப்பகுதியில் வாகனங்கள் செல்ல சாலை வசதி இல்லாத மலை கிராமங்களுக்கு குதிரைகள் மூலம் மின்னணு இயந் திரங்கள் அனுப்பும் பணி நடை பெற்றது. கொடைக்கானல் வட்டக் கானலில் இருந்து 9 கி.மீ. தூரத்தில் வனப்பகுதிக்குள் அமைந்துள்ள வெள்ளகவி கிராமத்துக்கு நேற்று குதிரைகள் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. இந்த கிராமத்தில் 400-க்கும் மேற்பட்டோர் வாக்களிக்க உள்ளனர்.

வாக்குப்பதிவு முடிந்தவுடன் அவை வெள்ளகவி கிராமத்தில் இருந்து தேனி மாவட்டம் பெரிய குளம் சென்று அங்கிருந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள திண் டுக்கல்லுக்கு கொண்டுசெல்லப் படும் என அலுவலர்கள் தெரிவித் தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x