Published : 16 Sep 2016 09:01 AM
Last Updated : 16 Sep 2016 09:01 AM

மருத்துவப் படிப்பில் சேர லஞ்சமாக பெரும் தொகை கொடுக்க பணம் எங்கிருந்து வருகிறது? - வருமான வரித்துறை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மருத்துவப் படிப்பில் சேர லஞ்சமாக பெரும் தொகை கொடுப்பதற்கு பணம் எங்கி ருந்து வருகிறது என்பது குறித்து வருமான வரித்துறையினர் விசாரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக சொல்லி பண மோசடியில் ஈடுபட்ட கோவை காந்திபுரத் தைச் சேர்ந்த எஸ்.முகமது சாயூப் என்பவர் தனக்கு முன்ஜாமீன் தரக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘‘பி.மணியன் என்பவரது மகனுக்கு மருத்துவப் படிப்பில் இடம் வாங்கித்தருவதாக கூறி ரூ.46.50 லட்சத்தை மோசடி செய்ததாக என் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆகவே அந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீ்ன் அளிக்க வேண்டும்’’ என்றார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

மருத்துவப் படிப்பில் மகனை சேர்ப்பதற்கு பெரும் தொகையான ரூ.46.50 லட்சம் மணியனுக்கு எப்படி வந்தது என்பதை போலீஸார் விசாரிக்க வேண்டும்.

அந்தப் பணத்தை இடைத் தரகர்களிடம் கொடுத்தவர் களையும் சட்டப்படி தண்டிக்க வேண்டும்.

மருத்துவப் படிப்பில் சேர பணம் மட்டுமே பிரதான தகுதி என்றால் லஞ்சம், ஊழல் எல்லாமே வீட்டில் உள்ள பெரியவர்கள் மூலமாகத்தான் குழந்தைகளுக்கு கற்றுத் தரப் படுகிறது என்ற நிலைதான் உருவாகும். எனவே, வருமான வரித்துறை அதிகாரிகளும் இதுகுறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும். மருத்துவப் படிப்புக்கு பெரும் தொகையை லஞ்சமாக கொடுக்க அவர்களிடம் என்ன பின்புலம் என்பதை வருமான வரித்துறை கண்டறிய வேண்டும்.

இதன்மூலம் இதுபோன்ற முறைகேடுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். பணத்தின் மூலம் மருத்துவ இடங்களை விலைக்கு வாங்கி னால், எதிர்காலத்தில் எப்படிப் பட்ட மருத்துவர்கள் இந்த சமுதாயத்துக்கு கிடைப் பார்கள் என்பது பெரும் கேள்விக் குறியாகிவிடும். ஏற்கெனவே வழக்கறிஞர், டாக்டர்கள், ஆசிரி யர்களுக்கு சமுதாயத்தில் நற் பெயர் இல்லை. இவ்வாறு கூறிய நீதிபதி, முன்ஜாமீன் மனுவை யும் தள்ளுபடி செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x