Published : 18 Jan 2017 09:00 PM
Last Updated : 18 Jan 2017 09:00 PM

போலீஸ் குவிப்பு: சென்னை மெரினாவில் போராட்டக்காரர்கள் மீது தடியடி

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மெரினாவில் நடைபெற்று வரும் போராட்டத்தில் போலீசார் திடீரென தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

எழிலகத்திற்கு எதிரே இந்த திடீர் தடியடி போலீசாரால் நடத்தப்பட்டது. நேற்று இரவு போராட்டக்காரர்களைச் சந்தித்த அமைச்சர்கள் தாங்கள் மாணவர்கள் உடன் நிற்போம் என்று உறுதி அளித்தனர்.

இன்று முதல்வர் பன்னீர்செல்வமும் பிரதமர் மோடியைச் சந்தித்து அவசரச் சட்டத்திற்கு வலியுறுத்துவதாக உத்தரவாதம் அளித்தார், ஆனால் போராட்டக்காரர்கள் எதையும் ஏற்கத்தயாராக இல்லை. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி உத்தரவு வரும் வரை போராட்டம் தொடரும் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இந்நிலையில், அமைதியாக நடைபெற்று வந்த போராட்டத்தில் 8 மணியளவில் போலீசார் தடியடி நடத்தினர். போலீசார் மீது தண்ணீர் பாட்டில்களை சிலர் வீசியதாலும், வேடிக்கைப் பார்க்கவந்தவர்களை அப்புறப்படுத்தும் போது லேசாக தடியடி நடத்த வேண்டியதாயிற்று என்றும் போலீஸ் தரப்பில் கூறியதாகத் தெரிகிறது. இதனையும் போராட்டக்காரர்கள் ஏற்கவில்லை, இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால் போலீசார் அமைதியான முறையில் போராட்டம் தொடரலாம் என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x