Published : 03 Jul 2017 08:27 AM
Last Updated : 03 Jul 2017 08:27 AM

பொதுத்துறை வங்கிகளை பாதுகாக்கக் கோரி செப்.15-ல் நாடாளுமன்றம் முன்பு லட்சம் பேர் திரண்டு போராட்டம்: வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு அறிவிப்பு

பொதுத்துறை வங்கிகளைப் பாது காக்கக் கோரி, டெல்லியில் நாடா ளுமன்றம் முன்பு ஒரு லட்சம் பேரை திரட்டி செப்டம்பர் 15-ம் தேதி போராட்டம் நடத்த இருப் பதாக அகில இந்திய வங்கி அதி காரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம், சென்னை அண்ணா நகர் எஸ்பிஓஏ பள்ளி யில் நேற்று நடந்தது. இதில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிகளான கே.அனந்தகுமார், கே.நீலமேகம் ஆகியோர் எழுதிய ‘பொதுத்துறை வங்கிகளின் மிகச்சிறந்த சேவை: உண்மைகளும், பொய்களும்’, ‘இந்தியாவின் கொள்கைகள் உலக வங்கி மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களால் உருவாக்கப் படுகிறது: பாராளுமன்றத்தில் இல்லை’, ‘11 வங்கிகளுக்கான திட்டங்கள்’ ஆகிய 3 நூல்கள் வெளி யிடப்பட்டன.

இந்த 3 நூல்களையும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் தலைவர் திலீப் கே.சகா வெளியிட, எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் பெற்றுக் கொண்டார். பின்னர் நிருபர்களிடம் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் டி.தாமஸ் பிராங்கோ கூறியதாவது:

இந்தியாவில் உள்ள வங்கி அதிகாரிகள் சங்கங்களில் 2 லட்சத்து 85 ஆயிரம் அதி காரிகளை உறுப்பினர்களாகக் கொண்ட சங்கமாக இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு விளங்குகிறது. இதன் செயற்குழு கூட்டம் சென்னையில் நடந்து வருகிறது. வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் ஆகஸ்ட் 22-ம் தேதி நாடு முழுவதும் வேலைநிறுத்தம் செய்வதாக ஏற்கெனவே அறி விக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக ஜூலை 19 முதல் நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளை பாதுகாப்பதற்கான ஒரு இயக்கம் தொடங்கப்படும்.

பொதுத்துறை வங்கிகளை பாதுகாப்பதற்காக செப்டம்பர் 15-ம் தேதி டெல்லியில் நாடாளு மன்றம் முன்பாக ஒரு லட்சம் பேரைத் திரட்டி போராட்டம் நடத்து வது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. வளர்ச்சிக் கான மக்கள் நாடாளுமன்றம் என்ற இயக்கத்தைத் தொடங்கி யிருக்கிறோம். அதன் இணைய தளமும் இந்தக் கூட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x