Published : 09 Jul 2017 11:26 AM
Last Updated : 09 Jul 2017 11:26 AM

பெருந்தமனி வீக்கத்தால் பாதிப்பு: சிறுவன் மார்பில் துளையிட்டு ஸ்டென்ட் பொருத்தினர் - முதல்முறையாக மியாட் மருத்துவர்கள் சாதனை

பெருந்தமனி வீக்கத்தால் பாதிக் கப்பட்ட ஆந்திர மாநில சிறுவ னுக்கு சென்னை மியாட் மருத் துவமனையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள் ளது. நாட்டிலேயே முதல்முறை யாக, மார்பு பகுதியில் துளையிட்டு ஸ்டென்ட் பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டி னத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் பிரசாதராவ். இவரது மகன் பரத் (15) பிளஸ் 1 படிக்கிறார். இவரது உடல் இயக்கம் கடந்த மாதக் கடைசியில் திடீரென பாதிக்கப்பட்டது. கை, கால்களை அசைக்க முடியவில்லை. இதை யடுத்து, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் நரம்பியல் சிகிச்சை அளிக்கப்பட்டது. வீடு திரும்பிய சில நாட்களில் அடி வயிற்றில் வலி ஏற்பட்டது. நடக்கவும் முடியாமல் சிரமப்பட்டார்.

இதையடுத்து, மீண்டும் மருத்து வமனையில் சேர்க்கப்பட்டு, அவ ருக்கு பல்வேறு மருத்துவப் பரி சோதனைகளை செய்யப்பட்டன. இதில், அவரது இதயத்தின் முக்கிய ரத்தக் குழாயான பெருந்தமனி வீங்கி இருப்பதும், கால்களுக்கு ரத்த ஓட்டம் செல்லாமல் இருப்பதும் தெரியவந்தது. இதற்கு சிகிச்சை அளிப்பது கடினம் என்று அங்குள்ள மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், ஒரு மருத்து வரின் பரிந்துரைப்படி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிறுவன் பரத் கடந்த மே 17-ம் தேதி சேர்க்கப் பட்டார். மருத்துவர்கள் பரி சோதனை செய்து பார்த்துவிட்டு, பெருந்தமனியில் ஸ்டென்ட் பொருத்த முடிவு செய்தனர்.

மே 23-ம் தேதி இதய அறுவை சிகிச்சை நிபுணர் விஜித் கே.செரி யன், ரத்தநாள அறுவை சிகிச்சை துறைத் தலைவர் கே.முரளி தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிறுவனது மார்பின் வலது பக்கம் மற்றும் அக்குள் பகுதி யில் சிறிய அளவில் துளையிட்டு அதன் வாயிலாக நவீன கருவியின் உதவியுடன் பெருந்தமனியில் ஸ்டென்ட் பொருத்தினர். கால் களுக்குச் செல்லாமல் இருந்த ரத்த ஓட்டத்தையும் சரிசெய்தனர். இந்த சிகிச்சைக்குப் பிறகு சிறுவன் பரத் நலமாக இருப்பதாகவும், நன்றாக நடக்க முடிவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மியாட் மருத் துவமனையில் நேற்று நடந்த செய்தி யாளர் சந்திப்பில் மருத்துவர்கள் விஜித் கே.செரியன், கே.முரளி ஆகியோர் கூறியதாவது:

பொதுவாக, கால்களின் ரத்தக் குழாய்கள் வழியாகத்தான் பெருந் தமனி உள்ளிட்ட ரத்தக் குழாய்களில் ஸ்டென்ட் பொருத்தப்படும். சிறுவ னது கால்களின் ரத்தக் குழாய் அளவு சிறியதாக இருந்ததால், 20 செ.மீ. அளவுள்ள ஸ்டென்ட்டை அதன்வழியாக கொண்டுசெல்ல முடியாது. அதனால் மார்பு, அக்குள் பகுதியில் சிறிய துளையிட்டு ஸ்டென்ட் பொருத்தப்பட்டது. இவ் வாறு பொருத்தப்படுவது நாட்டிலேயே முதல்முறை. சிகிச்சை முடிந்த 3-வது நாளிலேயே அவர் நடக்கத் தொடங்கிவிட்டார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கண்ணீர் மல்க நன்றி

சிறுவனின் தந்தை பிரசாத ராவ் கூறியபோது, ‘‘அறுவை சிகிச்சை செய்தால் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு 5 சதவீதம் மட்டுமே உள்ளது என்று விசாகப்பட்டினத்தில் மருத்துவர்கள் கூறினர். ஆனால், 95 சதவீதம் காப்பாற்றிவிடலாம் என்று மியாட் மருத்துவர்கள்தான் நம்பிக்கையோடு கூறினர். என் மகனின் உயிரைக் காப்பாற்றிய அவர்களுக்கு நன்றி’’ என்று கண்ணீர் மல்க கூறினார். மியாட் மருத்துவமனை தலைவர் மல்லிகா மோகன்தாஸ் உடன் இருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x