Published : 01 Jan 2017 08:44 PM
Last Updated : 01 Jan 2017 08:44 PM
பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 29 பைசாவும், டீசல் லிட்டருக்கு 97 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டது.
இதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 29 பைசாவும், டீசல் லிட்டருக்கு 97 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய விலை மாற்றம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்.
புதிய விலை உயர்வின்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.70.07-க்கு விற்பனை செய்யப்படும். அதேபோல் டீசல் விலை லிட்டர் ரூ.59.47-க்கு விற்பனை செய்யப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT